பிரதமர் அலுவலகம்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு
प्रविष्टि तिथि:
17 FEB 2024 7:20PM by PIB Chennai
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இழப்பீடாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவு வருமாறு:
"விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த விபத்து குறித்து கனத்த இதயத்துடன் அறிந்தேன். இந்த கடினமான நேரத்தில், எனது எண்ணங்கள் துயரமாக காலமானவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi’’
*******
ANU/PKV/DL
(रिलीज़ आईडी: 2006827)
आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam