பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
பயணத்தை எளிதாக்குதல், சரக்குப் போக்குவரத்து செலவு, எண்ணெய் இறக்குமதி மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக இந்திய ரயில்வேயில் 6 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
08 FEB 2024 8:07PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் ரூ.12,343 கோடி (தோராயமாக) மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் 6 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பல கண்காணிப்புத் திட்டங்கள் செயல்பாடுகளை எளிதாக்கும் மற்றும் நெரிசலைக் குறைக்கும். இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டங்கள் உள்ளன. இது பிராந்தியத்தில் உள்ள மக்களை "தன்னிறைவாக" மாற்றும், இது அவர்களின் வேலைவாய்ப்பு / சுய வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.
ராஜஸ்தான், அசாம், தெலங்கானா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 18 மாவட்டங்களை உள்ளடக்கிய 6 திட்டங்கள் தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை 1020 கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.
இந்தத் திட்டங்கள் பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தின் விளைவாக உருவானவை. இவை ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமாகியுள்ளன. இவை உணவு தானியங்கள், உணவுப் பொருட்கள், உரங்கள், நிலக்கரி, சிமெண்ட், இரும்பு, எஃகு, சாம்பல், கிளிஞ்சல், சுண்ணாம்புக்கல், சரக்குப் பெட்டகம் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதற்கான அத்தியாவசிய வழித்தடங்கள் ஆகும். திறன் விரிவாக்கப் பணிகளின் விளைவாக ஆண்டுக்கு 87 மில்லியன் டன் அளவுக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்து ஏற்படும். ரயில்வே, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிசக்தித் திறன்மிக்க போக்குவரத்து முறையாகவும் இருப்பதால், நாட்டின் சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைப்பதற்கும், எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் உதவும்.
***
(Release ID: 2004189)
ANU/SMB/BR/RR
(Release ID: 2004423)
Visitor Counter : 127
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam