நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதன்முறையாக, திறந்தவெளிக் கட்டமைப்பு மின்னணு வர்த்தகத்தில் நியாய விலைக் கடைகள்

प्रविष्टि तिथि: 07 FEB 2024 10:53AM by PIB Chennai

மின்னணு இந்தியாவை நோக்கிய ஒரு படியாக, மத்திய அரசின் உணவு, பொது விநியோகத் துறையின் செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ரா, இமாச்சலப் பிரதேசத்தின் உனா, ஹமீர்பூர் மாவட்டங்களில் திறந்தவெளிக் கட்டமைப்பு மின்னணு வர்த்தகத்தில் நியாய விலைக் கடைகள் என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.  உனா மாவட்டத்தில் 5 நியாய விலைக் கடைகள், ஹமீர்பூர் மாவட்டத்தில் 6 நியாய விலைக் கடைகள் என 11 நியாய விலைக் கடைகள் முதற்கட்டமாக காணொலி காட்சி வாயிலாக தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு சோப்ரா, இந்த முக்கிய முயற்சி நியாய விலைக் கடைகளை மாற்றியமைப்பதில் இத்துறையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வலு சேர்க்கிறது என்று தெரிவித்தார். பயனாளிகளின் மனநிறைவை அதிகரிப்பதுடன், வேளாண் வணிகர்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான கூடுதல் வழிகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று அவர் கூறினார். மேலும், இந்த முயற்சி நியாய விலைக்கடைகளின் முகவர்களுக்கு மின்னணு சந்தையில் தெரிவுநிலை, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகளுக்கு அப்பால் ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்திற்கான அணுகல், பெரிய சில்லரை விற்பனையாளர்கள், மின் வணிகத் தளங்களுடன் சமமாகப் போட்டியிடும் திறன் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது என்பதை அவர் எடுத்துக் கூறினார். மேலும், இணையதளம் வாயிலாகக் கொள்முதல் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் பயனாளிகள், தங்கள் சார்பாக இணையதளத்தில் கொள்முதல் செய்ய நியாய விலைக்கடை முகவர்களை அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

***

(Release ID: 2003348)
ANU/SMB/IR/RR/KV


(रिलीज़ आईडी: 2003412) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Telugu