உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான திட்டத்தை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டியுள்ளார்

Posted On: 01 FEB 2024 6:04PM by PIB Chennai

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான திட்டத்தை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது  என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மோடி அரசின் வளர்ச்சியடைந்த பாரதம் பட்ஜெட், நாட்டில் விவசாயிகளின் வளத்திற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றார். திரு மோடி அரசு 11.8 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவியையும், பயிர்க் காப்பீடு மூலம் 4 கோடி விவசாயிகளுக்குப் பாதுகாப்பையும் வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார். 3 கோடி லட்சாதிபதி மகளிர் என்ற இலக்கை உயர்த்தியதற்காக திரு மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க, கலாச்சாரத் தலங்களை மேம்படுத்துவதற்காக பட்ஜெட்டில், மாநிலங்களுக்கு சலுகைகள், நீண்ட கால வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சுற்றுலாத் துறையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் சூரியோதயத்  திட்டத்தின்’ கீழ், ஒரு கோடி குடும்பங்கள் தங்கள் வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

இது தவிர, இந்த பட்ஜெட்டில், 'கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை' தடுப்பதற்காக 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கவும் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2013-14-ம் ஆண்டில் ரூ. 2.2 லட்சமாக இருந்த வருமான வரி விலக்கை 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சமாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி உயர்த்தியுள்ளார் என்று உள்துறை அமைச்சர் கூறினார். இந்த முடிவு அரசின் மீதான வருமான வரி செலுத்துவோரின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றும், அவர்களின் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், நேர்முக வரி வசூலும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

***

ANU/AD/IR/AG/KRS


(Release ID: 2001677) Visitor Counter : 107