நிதி அமைச்சகம்
இடைக்கால பட்ஜெட்டில் நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கான விகிதங்கள் தொடரும் என அறிவிப்பு
Posted On:
01 FEB 2024 12:44PM by PIB Chennai
"மரபுக்கு இணங்க, வரிவிதிப்பு தொடர்பான எந்த மாற்றத்தையும் நான் செய்யவில்லை. நேர்முக வரிகள், இறக்குமதி வரிகள் உள்ளிட்ட மறைமுக வரிகளுக்கு அதே வரி விகிதங்கள் தொடரும்” என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது கூறினார்.
வரிவிதிப்பின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, தொடக்க நிறுவனங்கள் மற்றும் தங்கப் பத்திரங்கள் அல்லது ஓய்வூதிய நிதிகளால் செய்யப்படும் முதலீடுகளுக்கு சில வரிச் சலுகைகளை நீட்டிக்கவும், சில ஐஎஃப்எஸ்சி அலகுகளின் சில வருமானங்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
வாழ்க்கையை எளிதாக்குதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அரசின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, ஏராளமான சரிபார்க்கப்படாத, சமரசம் செய்யப்படாத அல்லது சர்ச்சைக்குரிய நேர்முக வரிக் கோரிக்கைகளுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் பல 1962 ஆம் ஆண்டுக்கு முந்தையவையாகும்.
2009-10 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு ரூ.25,000 வரையிலும், 2010-11 நிதியாண்டுகளுக்கு ரூ.10,000 வரையிலும் நிலுவையில் உள்ள நேர்முக வரி கோரிக்கைகளைத் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக திருமதி சீதாராமன் கூறினார்.
இதன் மூலம் சுமார் ஒரு கோடி வரி செலுத்துவோர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
(Release ID: 2001156)
ANU/SMB/PKV/KRS
(Release ID: 2001561)
Visitor Counter : 122