நிதி அமைச்சகம்

சராசரி மாத மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் இரட்டிப்பாகி ரூ.1.66 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது

Posted On: 01 FEB 2024 12:39PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2024-25-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது பேசுகையில், இந்தியாவில் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மறைமுக வரி விதிப்பு முறையை ஒருங்கிணைத்து, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறை (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதன் மூலம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மீதான இணக்கச் சுமை குறைந்துள்ளது என்றார்.

"ஒரு முன்னணி ஆலோசனை நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, 94 சதவீத தொழில்துறையினர் ஜிஎஸ்டி குறித்து நேர்மறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். 80 சதவீதம் பேர், இது விநியோகத் தொடர் விரிவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்," என்று நிதி அமைச்சர் கூறினார். அதே நேரத்தில், ஜிஎஸ்டி-யின் வரி வருவாய் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும், சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வருவாய் இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரட்டிப்பாகி ரூ. 1.66 லட்சம் கோடியாக  உள்ளது  என்றும்  திருமதி நிர்மலா  சீதாராமன்  கூறினார்.

மாநிலங்களின்   வருவாயும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  குறித்து பேசிய நிதியமைச்சர், ஜிஎஸ்டி-க்கு பிந்தைய காலகட்டத்தில் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட இழப்பீடு உள்ளிட்டவற்றால் மாநிலங்களின் எஸ்ஜிஎஸ்டி வருவாய் 2017-18 முதல் 2022-23 வரை 1.22 சதவீத உயர்வை எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஜிஎஸ்டிக்கு முந்தைய 2012-13 முதல் 2015-16 வரையிலான நான்காண்டு காலத்தில் துணை வரிகளிலிருந்து மாநிலங்களின் வருவாய் வரி மிதப்பு வெறும் 0.72 மட்டுமே இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். சரக்கு போக்குவரத்து செலவுகள் மற்றும் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைந்துள்ளதாகவும், இதனால் நுகர்வோர்கள் பயன் அடைந்துள்ளனர் என்றும் நிதியமைச்சர்  கூறினார்.

*****************

(Release ID: 2001100)

ANU/SMB/PLM/RR



(Release ID: 2001303) Visitor Counter : 109