நிதி அமைச்சகம்

நிர்வாகம், மேம்பாடு மற்றும் மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கான செயல்பாடுகள் ஆகியவற்றுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விரிவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது- மத்திய நிதியமைச்சர்

Posted On: 01 FEB 2024 12:35PM by PIB Chennai

நிர்வாகம், மேம்பாடு மற்றும் மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கான செயல்பாடுகள் ஆகியவற்றுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை  விரிவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 2024-25-ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், மொத்த உள்நாட்டு பொருட்களின் உற்பத்தி அடிப்படையிலான உயர் வளர்ச்சியை வழங்குவதுடன், நிர்வாகம், வளர்ச்சி மற்றும் செயல்பாடு ஆகிய 3 அம்சங்களிலும் சம அளவில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களை மையப்படுத்திய நம்பிக்கை அடிப்படையிலான சிறந்த நிர்வாகத்தை வழங்கும் வகையில், மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து “குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம்” என்ற அணுகுமுறையை அரசு பின்பற்றி வருவதாக கூறினார்.

நாட்டின் பொருளாதார நிலை மேம்பட்டு வருவதை முதலீடுகளின் அதிகரிப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும்  அனைத்துத் துறைகளின் முன்னேற்றம் ஆகியவை மூலம் தெளிவாக காணமுடியும் என்று  கூறியுள்ளார்.

மக்களின் சராசரி வருமானம் 50சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், பணவீக்கம் விகிதம் கட்டுக்குள் இருக்கிறது என்றும், பெரிய அளவிலான திட்டங்கள் குறித்தக் காலத்தில் நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியை உள்ளடக்கிய மக்களை மையப்படுத்திய பன்முகத்தன்மைக் கொண்ட பொருளாதார மேலாண்மை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

நேரடியான, டிஜிட்டல் மற்றும் சமூக அடிப்படையிலான அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்த காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு படைக்கப்பட்டு வருவதாக அவர்
கூறினார்.

பொருளாதார முன்னேற்றத்தில்  நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதாக அவர் கூறினார்.

21-ம் நூற்றாண்டில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரு புதிய                         உற்பத்தி காரணியாக உருவெடுத்துள்ளதாகவும்,  இது நாட்டின் பொருளாதார கட்டமைப்பு்ககு உந்து சக்தியாக திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.

ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி என்பதை சரக்கு மற்றும: சேவை வரி விதிப்பின் அமலாக்கம் சாத்தியமாக்கியுள்ளது. வரிசீர்திருத்த நடவடிக்கைகள், வரி விதிப்பு கட்டமைப்பை விரிவுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நிதித்துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், சேமி்ப்பு, கடன் வழங்கல் மற்றும் முதலீடுகளை மேலும் திறம்பட கையாள்வதற்கு உதவிடுவதாக அவர் தெரிவித்தார்.

கிஃப்ட் நகரத்தில் செயல்படும்   சர்வதேச நிதிசார் சேவை மையம் (GIFT-IFSC)  மற்றும் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்                       வகையிலான சர்வதேச முதலீடுகள் மற்றும் நிதிசார் சேவைகளை செயல்படுத்துவதற்கான நுழை வாயிலாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணவீக்க விகிதம், அரசின் கொள்கை வரையறைக்குகள் பராமரிக்க நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். 

***

(Release ID: 2001085)

ANU/SM/SV/RS/RR



(Release ID: 2001284) Visitor Counter : 103