நிதி அமைச்சகம்
மேலும் பல புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் - மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
01 FEB 2024 12:44PM by PIB Chennai
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டும் வகையில், மேலும் பல மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
பல்வேறு துறைகளின் கீழ் தற்போதுள்ள மருத்துவமனை உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார். இந்த முயற்சி இளைஞர்கள் மருத்துவர்கள் ஆவதற்கான வாய்ப்பை உருவாக்குவது மட்டுமின்றி, மக்களுக்கு சுகாதார சேவைகளை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள் என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
***
(Release ID: 2001104)
ANU/SMB/PLM/RR
(रिलीज़ आईडी: 2001271)
आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam