பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை வரவேற்றப் பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 25 JAN 2024 10:41PM by PIB Chennai

பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல்  மேக்ரனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றார்.

நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் அவர் பங்கேற்பது மிகவும் பெருமைக்குரியது என்று பிரதமர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"எனது நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் அவர்களை, இந்தியாவுக்கு வரவேற்கிறோம்.

வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் திறமையான மக்கள் நிறைந்த ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து அதிபர் திரு மேக்ரன் தனது இந்தியப் பயணத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தில்லியில் நாளை (ஜனவரி 26) நடைபெறும் குடியரசு தின விழாவில் அவர் பங்கேற்கிறார் என்பது பெருமிதம் அளிக்கிறது. அவரது வருகை நமது நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, நட்பு மற்றும் ஒத்துழைப்பின் நமது பகிரப்பட்ட வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை சேர்க்கிறது.

***

(Release ID: 1999788)

ANU/SMB/PKV/RS/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2000506) வருகையாளர் எண்ணிக்கை : 121