நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜனவரி 30 அன்று ஆலோசனை
நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2024 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும்
प्रविष्टि तिथि:
29 JAN 2024 2:53PM by PIB Chennai
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை (ஜனவரி 30, 2024) காலை 11:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெறும்.
நாடாளுமன்ற அமர்வு 2024, ஜனவரி 31 அன்று குடியரசுத்தலைவரின் உரையுடன் தொடங்கும். அரசு அலுவல்களின் அவசரங்களுக்கு உட்பட்டு, அமர்வு 2024, பிப்ரவரி 9 அன்று முடிவடையும். மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024 பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
***
(Release ID: 2000336)
ANU/SMB/RR
(रिलीज़ आईडी: 2000341)
आगंतुक पटल : 548