பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

ஆறு பிரிவுகளில் சிறப்பான சாதனை படைத்த 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை ஜனவரி 22 அன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார்


விருது பெற்றவர்களுடன் ஜனவரி 23 அன்று பிரதமர் கலந்துரையாடுகிறார்

Posted On: 19 JAN 2024 10:02AM by PIB Chennai

2024, ஜனவரி 22 அன்று விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை வழங்குவார்.

விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, ஜனவரி 23 அன்று கலந்துரையாடுவார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானியும், இணை அமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாயும் குழந்தைகளுடன் கலந்துரையாடி, அந்தந்தப் பிரிவுகளில் முன்மாதிரியான செயல்திறனுக்காக அவர்களை வாழ்த்துவார்கள்.

கலை மற்றும் கலாச்சாரம் (7), வீரம் (1), புதுமை (1), அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (1), சமூக சேவை (4), விளையாட்டு (5) ஆகிய ஆறு துறைகளில் தனித்துவமான சாதனைகளுக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருது வழங்கப்படும். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 2 முன்னேற விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த 9 சிறுவர்களும், 10 மாணவிகளும் விருது பெறுகின்றனர்.

குழந்தைகளின் தனித்துவமான சாதனைக்காக பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் ஏழு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்ளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை & கலாச்சாரம், வீரம், சுற்றுச்சூழல், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் & தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு ஆகியவை தேசிய அங்கீகாரத்திற்குத் தகுதியான துறைகளாகும். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிராந்திய செய்தித்தாள்கள் மற்றும் அனைத்து முக்கிய தேசிய செய்தித்தாள்களிலும் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் நியமனங்களை அதிகரிக்க சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டது. தேசிய விருது இணையதளம், மே 9, 2023 முதல் செப்டம்பர் 15, 2023 வரை  பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது.  நாடு முழுவதும் உள்ள அமைச்சகங்கள், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் / நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர்கள் முதலானோர் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் விரிவான விளம்பரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதன் மூலம் விருது விளம்பரப்படுத்தப்பட்டு, கிராம பஞ்சாயத்துகள் / நகராட்சிகள் உட்பட அனைத்து மட்டங்களிலிருந்தும் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன

பரிந்துரைகளின் உண்மைத்தன்மை மாவட்ட நீதிபதிகள் மற்றும் கள வல்லுநர்கள் உட்பட பல்வேறு நிலைகளில்  சரிபார்க்கப்பட்டு, சமூக சேவை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு போன்ற துறைகளின் நிபுணர்கள் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டது.

பட்டியலிடப்பட்ட சுயவிவரங்கள் சங்கீத நாடக அகாடமி, மத்திய ரிசர்வ் காவல் படை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறை, இந்திய பொது நிர்வாக நிறுவனம், இந்திய விளையாட்டு ஆணையம் போன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தேசிய அளவிலான நிபுணர்களால் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டன. இறுதி தேர்வுக்கான சுயவிவரங்களை தேசிய தேர்வுக் குழு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

***

 

(ANU/SMB/BR/KV(Release ID: 1997719) Visitor Counter : 200