பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

சவுத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் நிறுவனம் 660 மெகாவாட் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும் மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் இரண்டு 800 மெகாவாட் அனல் மின் நிலையங்களை அமைக்கவும் பங்கு முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 18 JAN 2024 12:54PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், சவுத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் நிறுவனம் 660 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலையத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. எஸ்இசிஎல் மற்றும்  எம்பிபிஜிசிஎல் ஆகியவற்றின் கூட்டு முயற்சி மூலம் இதை அமைக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், (மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்களை மகாநதி பேசின் பவ் லிமிடெட் மூலம் அமைப்பதற்கான பங்கு முதலீட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்இசிஎல், எம்சிஎல் மற்றும் கோல் இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் பங்கு முதலீடுகளுக்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவைக் குழு கீழ்க்கண்டவாறு ஒப்புதல் அளித்துள்ளது:

 

(அ) மத்தியப் பிரதேசம்  சச்சாய் கிராமத்தில் உள்ள அமர்கந்தக் அனல் மின் நிலையத்தில் எஸ்இசிஎல் மற்றும் எம்பிபிஜிசிஎல் ஆகியவற்றின் கூட்டு முயற்சி மூலம் 660 மெகாவாட் அனல் மின் நிலையம் ரூ.5,600 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

(ஆ) ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள இரண்டு 800 மெகாவாட் அனல் மின் நிலையம்  ரூ.15,947 கோடி திட்ட  மூலதனத்துடன் அமைக்கப்படும். இதில் எம்.சி.எல்லின் பங்கு மூலதனம் ரூ.4,784 கோடியாக இருக்கும்.

-----------

ANU/SM/PLM/RS/KV

 



(Release ID: 1997382) Visitor Counter : 77