பிரதமர் அலுவலகம்
தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2023-ஐ வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
09 JAN 2024 7:14PM by PIB Chennai
தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2023-ஐ வென்றவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த வீரர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் உறுதியான அர்ப்பணிப்பை பாராட்டியுள்ள பிரதமர், அவர்கள் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் வழங்கும் விழா குறித்து குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2023-ஐ வென்ற புகழ்பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளும், உறுதியான அர்ப்பணிப்பும் நமது தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது. அவர்கள் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளனர்.
---
(Release ID: 1994629)
ANU/SM/PLM/KPG/KRS
(रिलीज़ आईडी: 1994645)
आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Kannada
,
Malayalam
,
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu