பிரதமர் அலுவலகம்

அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்

இரண்டு புதிய அமிர்த பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

6 புதிய வந்தே பாரத் ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர்

Posted On: 30 DEC 2023 4:47PM by PIB Chennai

சீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மேலும் பல ரயில்வே திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அயோத்தி தாம் ரயில் நிலையம் இப்போது 10 ஆயிரம் மக்களைக் கையாளுகிறது. இப்போது  மறுசீரமைப்பு முடிந்ததும் இது 60 ஆயிரத்தை எட்டும் என்று கூறினார். வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்களுக்குப் பிறகு 'அமிர்த பாரத்' என்ற புதிய ரயில் தொடர் குறித்து தெரிவித்த பிரதமர், முதல் அமிர்த பாரத் ரயில் அயோத்தி வழியாகச் செல்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த ரயில்களை இன்று பெற்றதற்காக உ.பி, தில்லி, பீகார், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

நவீன அமிர்த பாரத் ரயில்களின் அடித்தளத்தில் உள்ள ஏழைகளுக்கான சேவை உணர்வை பிரதமர் எடுத்துரைத்தார். வேலை நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்களும், அவ்வளவு வருமானம் இல்லாதவர்களும் நவீன வசதிகளுக்கும், வசதியான பயணத்திற்கும் தகுதியானவர்கள். இந்த ரயில்கள் ஏழைகளின் வாழ்க்கையில் கண்ணியத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். வளர்ச்சியை பாரம்பரியத்துடன் இணைப்பதில் வந்தே பாரத் ரயில்கள் வகிக்கும் பங்கையும் பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காசியில் இருந்து இயக்கப்பட்டது. இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டில் 34 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் காசி, கத்ரா, உஜ்ஜைனி, புஷ்கர், திருப்பதி, ஷீரடி, அமிர்தசரஸ், மதுரை என ஒவ்வொரு பெரிய நம்பிக்கை மையத்தையும் இணைக்கிறது. இந்த வரிசையில், இன்று அயோத்திக்கு வந்தே பாரத் ரயிலின் பரிசு கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

சீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தின் முதல் கட்டம் - அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
இது  ரூ .240 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று மாடிகள் கொண்ட நவீன ரயில் நிலைய கட்டிடத்தில் லிப்ட், எஸ்கலேட்டர்கள், உணவு பிளாசாக்கள், பூஜை தேவைகளுக்கான கடைகள், மேலாடை அறைகள், குழந்தைகள் பராமரிப்பு அறைகள், காத்திருப்பு அறைகள் என அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. இந்த ரயில் நிலைய கட்டிடம், அனைவரும் அணுகக்கூடிய மற்றும் 'ஐ.ஜி.பி.சி சான்றளிக்கப்பட்ட பசுமை நிலைய கட்டிடம்' ஆகும்.

அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டின் புதிய வகை அதிவிரைவு (சூப்பர்பாஸ்ட்) பயணிகள் ரயில்களான அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமிர்த பாரத் ரயில் குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட எல்.எச்.பி புஷ்- புல் ரயில் ஆகும். இந்த ரயிலின் இரு முனைகளிலும் சிறந்த முடுக்கத்திற்காக லோகோக்கள் உள்ளன. இது ரயில் பயணிகளுக்கு அழகான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைக்கப்பட்ட இருக்கைகள், சிறந்த லக்கேஜ் ரேக், பொருத்தமான மொபைல் ஹோல்டருடன் மொபைல் சார்ஜிங் பாயிண்ட், எல்இடி விளக்குகள், சிசிடிவி, பொது தகவல் அமைப்பு போன்ற மேம்பட்ட வசதிகளை வழங்குகிறது. 

தர்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹார் டெர்மினல் அமிர்த  பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் மால்டா டவுன்-சர் எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினஸ் (பெங்களூரு) அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு புதிய அமிர்த பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில்களின் தொடக்கப் பயணத்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில், ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-புதுதில்லி, அமிர்தசரஸ்-தில்லி, கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட், மங்களூர்-மட்கான், ஜல்னா-மும்பை, அயோத்தி-ஆனந்த் விஹார் முனையம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இவையாகும்.

பிராந்தியத்தில் ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ .2300 கோடி மதிப்புள்ள மூன்று ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  ரூமா சகேரி-சந்தேரி மூன்றாவது பாதை திட்டம்,  ஜான்பூர்-துளசி நகர், அக்பர்பூர்-அயோத்தி, சோஹாவல்-பத்ராங்கா மற்றும் சப்தர்கஞ்ச்-ரசௌலி பிரிவுகள் ஜான்பூர்-அயோத்தி-பாராபங்கி இரட்டை ரயில் பாதை திட்டம், மல்ஹௌர்-தலிகஞ்ச் ரயில்வே பிரிவின் இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.



(Release ID: 1991845) Visitor Counter : 71