பிரதமர் அலுவலகம்
பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் 10 கோடியாவது பயனாளியின் வீட்டுக்குப் பிரதமர் சென்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 DEC 2023 6:32PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30-12-2023) அயோத்தியில் உள்ள மீரா மஞ்சியின் வீட்டிற்குச் சென்றார். அவர் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டமான உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளி ஆவார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
“பகவான் ஸ்ரீ ராம் நகரில் உள்ள சகோதரி மீரா மஞ்சியின் வீட்டிற்குச் சென்ற அனுபவம் மறக்க முடியாதது!”
“அயோத்தியில், உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளியான சகோதரி மீரா-வின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடினேன். அரசின் திட்டங்கள் முழு குடும்பத்தின் வாழ்க்கையையும் எப்படி எளிதாக்கி இருக்கின்றன என்பதை அறிந்து மிகவும் திருப்தி அடைந்தேன்.”’
Release ID: 1991792
AD/PLM/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1991836)
வருகையாளர் எண்ணிக்கை : 162
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam