தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பத்திரிகை மற்றும் பருவ இதழ்களைப் பதிவு செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது

Posted On: 21 DEC 2023 5:40PM by PIB Chennai

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக, 1867-ம் ஆண்டு காலனியாதிக்க காலச் சட்டத்திற்கு மாற்றாக, பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுச் சட்டம் 2023 மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.   இந்த மசோதா ஏற்கனவே மழைக்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில்  நிறைவேறியது.

புதிய சட்டமான பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்களின் பதிவு மசோதா, 2023, இதழ்களின் தலைப்பு ஒதுக்கீடு மற்றும் பதிவு செயல்முறையை எந்த நேரடித் தலையீடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் பதிவு செய்யும் நடைமுறையை எளிதாக்குகிறது. இதன் மூலம் பதிப்பாளர்கள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வெளியீட்டாளர்கள், இந்த நடைமுறையை விரைவுபடுத்த பத்திரிகை தலைமைப் பதிவாளருக்கு உதவும்ஒரு வெளியீட்டைத் தொடங்குவதில் சிறிய பத்திரிகையாளர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்மிக முக்கியமாக, வெளியீட்டாளர்கள் இனி மாவட்ட நீதிபதிகளிடமோ அல்லது உள்ளூர் அதிகாரிகளிடமோ ஒரு பிரகடனத்தை தாக்கல் செய்து அத்தகைய அறிவிப்புகளை அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லைமேலும், அச்சகங்கள் அத்தகைய எந்த அறிவிப்பையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக ஒரு தகவல் மட்டுமே போதுமானது

க்களவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய தகவல் மற்றும் லிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், "அடிமை மனப்பான்மையை அகற்றி  புதிய  இந்தியாவுக்கான புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கான மோடி அரசின் மற்றொரு படியை இந்த மசோதா பிரதிபலிக்கிறது" என்று கூறினார். குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டு வருவது, வணிகம் செய்வதை எளிதாக்குவது மற்றும் புதிய சட்டங்கள் மூலம் வாழ்க்கையை எளிதாக்குவது ஆகியவை அரசின் முன்னுரிமையாகும் என்று அமைச்சர் மேலும் கூறினார்காலனித்துவ காலச் சட்டத்தைக் கணிசமாக குற்றமற்றதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனசில விதிமீறல்களுக்கு, முன்பு இருந்ததைப் போல தண்டனை வழங்குவதற்குப்  பதிலாக  நிதி அபராதங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.   மேலும்,  இந்திய  பிரஸ் கவுன்சில் தலைவர் தலைமையில் நம்பகமான மேல்முறையீட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முடிவெடுப்பதில் சில நேரங்களில் 2, 3 ஆண்டுகள் ஆனநிலையில், தற்போது 60 நாட்களில் முடிவெடுக்க இந்த மசோதா வகை செய்கிறது என அமைச்சர் தெரிவித்தார்.

1867-ஆம் ஆண்டுச் சட்டம், பிரிட்டிஷ் அரசின் மரபுவழிச் சட்டமாகும்.  இது பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை அச்சிடுவோர் மற்றும் பதிப்பாளர்கள் மீது முழுமையான கட்டுப்பாட்டை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மேலும் பல்வேறு விதி மீறல்களுக்கு சிறைத்தண்டனை உட்பட கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. இன்றைய பத்திரிகை சுதந்திர யுகத்தில் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை இது உணர்த்துகிறது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1989267

----

(Release ID: 1989267)

ANU/SMB/PKV/KPG/RR



(Release ID: 1990894) Visitor Counter : 111