மத்திய அமைச்சரவை

பிரசார் பாரதி, மலேசியாவின் ரேடியோ டெலிவிஷன் மலேசியா (ஆர்டிஎம்) இடையே ஒலிபரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், மலேசியாவும் கையெழுத்திட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 27 DEC 2023 3:25PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023 நவம்பர் 07   அன்று கையெழுத்திடப்பட்ட பிரசார் பாரதி, மலேசியாவின் ரேடியோ டெலிவிஷன் மலேசியா  இடையேயான ஒலிபரப்பு புரிந்துணர்வு  ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது ஒலிபரப்பு, செய்திப் பரிமாற்றம், ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அந்நாட்டுடனான இந்தியாவின் நட்புறவைக் கணிசமாக அதிகரிக்கவும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நாடுகளுடன் பிரசார் பாரதி கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டைக் கட்டமைப்பதில் பிரசார் பாரதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அனைவருக்கும் அர்த்தமுள்ள, துல்லியமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் தொடர்ச்சியான கவனம் செலுத்துகிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்ற நாடுகளில் நிகழ்ச்சிகளை விநியோகிப்பதிலும், சர்வதேச ஒலிபரப்பாளர்களுடன் கூட்டாண்மையை வளர்ப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய உத்திகளை ஆராய்வதிலும் முக்கியமானதாக இருக்கும். கலாச்சாரம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, செய்தி மற்றும் பிற துறைகளில் இலவச / இலவசமற்ற அடிப்படையில் திட்டங்களை பரிமாறிக்கொள்வது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் ஏற்படும் முக்கிய நன்மையாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1990747

***

ANU/SMB/IR/AG/RR



(Release ID: 1990853) Visitor Counter : 56