பிரதமர் அலுவலகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 DEC 2023 9:56AM by PIB Chennai
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னதமான போதனைகளை மக்கள் நினைவுகூர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! இந்தப் பண்டிகைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் வழங்கட்டும். கிறிஸ்துமஸ் அடையாளப்படுத்தும் நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வைக் கொண்டாடுவதுடன், அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் உலகத்திற்காகப் பாடுபடுவோம். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னதமான போதனைகளையும் நாம் நினைவுகூர்கிறோம்."
******
ANU/SMB/BR/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1990227)
வருகையாளர் எண்ணிக்கை : 162
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam