தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்

Posted On: 22 DEC 2023 3:40PM by PIB Chennai

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவு தளத்தை உருவாக்குவதற்காக 26.08.2021 அன்று இ-ஷ்ரம் இணையதளம் தொடங்கப்பட்டது. டிஜிட்டல் இந்தியா விருது -2022 போட்டியில் "பொது டிஜிட்டல் தளங்கள் - மத்திய அமைச்சகங்கள் துறைகள்" பிரிவின் கீழ் "தங்க விருதை" இ-ஷ்ராம் இணையதளம் வென்றது. 2023, ஜனவரி 7,  அன்று விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் இந்த விருதினை வழங்கினார்.

2023 ஜனவரி முதல் 2023  நவம்பர் வரை மொத்தம் 69.26 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, 2023 டிசம்பர் 17 நிலவரப்படி, 29.23 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ராம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இ-ஷ்ரம் இணையதளம், தேசிய வேலைவாய்ப்பு சேவை(என்.சி.எஸ்), திறன் இந்தியா டிஜிட்டல் (எஸ்.ஐ.டி) இணையதளம், பிரதமரின் ஷ்ரம் யோகி மன்-தன்(பி.எம்-எஸ்.ஒய்.எம்), மை ஸ்கீம் மற்றும் திஷா இணையதளம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

 இ-ஷ்ராம் தரவுகள் பல திட்டங்களை முறைப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை முறைப்படுத்துவதற்காக இ-ஷ்ராம் பதிவுதாரர்களின் தகவல்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்காக தயாரிக்கப்பட்ட வழிகாட்டும் நடைமுறைகள் மற்றும் தரவு பகிர்வு வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டது. தரவு பகிர்வு இணையதளம் தொடங்கப்பட்டது. அனைத்து 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும் தரவு பகிர்வு இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அந்தந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் இ-ஷ்ராம் பதிவுதாரர்களின் தகவல்களை அணுக முடியும்.

மத்திய அமைச்சகங்கள் / துறைகளுக்காக தயாரிக்கப்பட்ட வழிகாட்டும் நடைமுறைகள்  மற்றும் தரவு பகிர்வு வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இ-ஷ்ரமில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் துறை தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை மாநில கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது அத்தகைய அனைத்து தொழிலாளர்களையும் அவர்களின் தகுதியின் அடிப்படையில் மாநிலங்களின் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் (பி.ஓ.சி.டபிள்யூ) வாரியங்களில் அடையாளம் காணவும் பதிவு செய்யவும் உதவும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விபத்தில் சிக்கி, அதன் விளைவாக மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும் இ-ஷ்ராம் பதிவுதாரர்களுக்கு நன்மைகளை வழங்குவதற்காக கருணைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய வேலைவாய்ப்பு சேவை (என்சிஎஸ்)

தேசிய வேலைவாய்ப்பு சேவை (என்சிஎஸ்) திட்டம் என்பது 20.07.2015 அன்று தேசிய வேலைவாய்ப்பு சேவையை உருமாற்றம் செய்வதற்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்க ரீதியிலான திட்டமாகும். பொருத்தமான வேலையை தேர்வு செய்தல், வேலைவாய்ப்பு ஆலோசனை, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு படிப்புகள் பற்றிய தகவல்கள், தொழில் பழகுநர், இன்டர்ன்ஷிப் போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகள் இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் வழங்கப்படுகிறது [www.ncs.gov.in].

2023 நவம்பர் 30, நிலவரப்படி, என்.சி.எஸ் தளத்தில் 3.64 கோடிக்கும் அதிகமானோர் வேலை தேடுவதற்காக பதிவு செய்துள்ளனர். வேலை தரும் தரும் 19.15 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. 1.92 கோடிக்கும் அதிகமான பணியிடங்களுக்கான காலியிடங்கள் குறித்த தகவல்கள் என்சிஎஸ் இணையதளத்தில் உள்ளன. 2023 நவம்பரில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு பணிகளுக்கான 13.49 லட்சத்துக்கும் அதிகமான காலியிடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் 28 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு விரிவான இந்தியா முழுமைக்குமான கட்டமைப்பை உருவாக்குகிறது. மாநிலங்களைத் தவிர, என்.சி.எஸ் காலியிடங்களை நிரப்ப monster.com, ஃப்ரெஷர்ஸ்வேர்ல்ட், ஹைர்மீ, டி.சி.எஸ்-ஐ.ஓ.என், குவிக்கர், குவெஸ் கார்ப் போன்ற பல தனியார் இணையதளங்களுடன் ஒருங்கிணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

என்.சி.எஸ் பங்கெடுப்பாளர்கள் என்.சி.எஸ் இணையதளத்தில் இருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் திறன் இந்தியா இணையதளம், உதயம் இணையதளம் (எம்.எஸ்.எம்.இ), இ-ஷ்ராம், ஈ.பி.எஃப்.ஓ, இ.எஸ்.ஐ.சி, டிஜிலாக்கர் போன்றவற்றுடன் என்.சி.எஸ் இணையதளம் இணைக்கப்பட்டுள்ளது.

 

விரைவில் என்.சி.எஸ் 2.0 என்ற மேம்படுத்தப்பட்ட பதிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வேலை தேடுபவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப கண்ணியமான வேலைகளைப் பெறுவதற்கு உதவுவதோடு, வேலை தரும் நிறுவனங்கள் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 30.12.2020 அன்று ஈபிஎஃப்ஓ-இணைக்கப்பட்ட தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு முகாம்  திட்டத்தை அறிவித்தது. 05.12.2023 நிலவரப்படி, 1,52,499 நிறுவனங்கள் மூலம் 60.48 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.10,043.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் மாநில காப்பீட்டு நிறுவனம் (இ.எஸ்.ஐ.சி.)

161 மருத்துவமனைகள் மற்றும் 1574 மருந்தகங்களின் வலையமைப்பைக் கொண்ட இ.எஸ்.ஐ.சி., லட்சத்தீவுகள் உட்பட 611 மாவட்டங்களுக்கு அதன் பரப்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது.

12 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் வகையில் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3.72 கோடியாக அதிகரித்துள்ளது.

சிறந்த புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதற்காக, மே 2023 முதல் இ.எஸ்.ஐ.சி நாடு முழுவதும் 100 படுக்கைகள் அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட அதன் 38 மருத்துவமனைகளில் கீமோதெரபி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இ.எஸ்.ஐ.சி மருத்துவ உள்கட்டமைப்பை தீவிரமாக மேம்படுத்தி வருகிறது, மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 8 ஆகவும், எம்.பி.பி.எஸ் இடங்கள் 950 ஆகவும், எம்.டி / எம்.எஸ் இடங்கள் 275 ஆகவும் அதிகரித்துள்ளன.


*******


ANU/PKV/BS/DL



(Release ID: 1989953) Visitor Counter : 70