பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் கீழ் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களில் 63,000–க்கும் மேற்பட்ட பதிவுகள் நடைபெற்றுள்ளன

Posted On: 20 DEC 2023 12:17PM by PIB Chennai

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் கீழ் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களில்  63,000-க்கும் மேற்பட்ட பதிவுகள்  நடைபெற்றுள்ளன.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குழந்தைகளின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து ஒருமுகப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்பாடு செய்து வருகின்றன.  யாத்திரை தொடங்கப்பட்டதிலிருந்து, 57,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரோக்கியமான  குழந்தைகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர் .

இந்த யாத்திரையில் பங்கேற்றவர்களில் 50% பேர் பெண்கள் என்பதால், முன்னேற்றம், அதிகாரமளித்தலுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு முயற்சியை இது எடுத்துக்காட்டுகிறது.

நாடு முழுவதும் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரைக்கு  ஆதரவளிப்பதில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1988531

***

ANU/PKV/IR/AG/KV



(Release ID: 1988714) Visitor Counter : 69