சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை

Posted On: 19 DEC 2023 1:28PM by PIB Chennai

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் கீழ், இதுவரை 3,156 கிராமப் பஞ்சாயத்துகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட 65,348 சுகாதார முகாம்களில் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1,03,55,555 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார முகாம்களில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன:

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்ய திட்டம் (ஏபி-பி.எம்.ஜே.ஏ.ஒய்): நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரைக்கான சுகாதார அமைச்சகத்தின் முதன்மை திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டு பயனாளிகளுக்கு உடல் சுகாதார அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. இதுவரை 19,03,200 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று நடைபெற்ற சுகாதார முகாம்களில் மொத்தம் 5,31,025 ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 84,27,500 குடும்ப அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

காசநோய்: காசநோயாளிகளின் அறிகுறிகளைப் பரிசோதித்தல், சளி பரிசோதனை செய்தல், சில இடங்களில் நாட் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காசநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகள் உயர் சிசிக்சைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். யாத்திரையின் 34 –ம் நாள் நிறைவில், 36,48,700-க்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 2,63,000 க்கும் மேற்பட்டோர் உயர் பொது சுகாதார மையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அரிவாள் செல் நோய்: பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அரிவாள் செல் நோயை (எஸ்.சி.டி) கண்டறிவதற்காக தகுதியான நபர்கள் (40 வயது வரை) 3,83,000-க்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டதில், 18,300 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக உயர் பொது சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தொற்றா நோய்கள் : உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான தகுதியான மக்களுக்கு (30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) பரிசோதனை செய்யப்படுகிறது, மேலும் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகள் உயர் மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். சுமார் 81,15,000 பேருக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 3,74,000-க்கும் மேற்பட்டோருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், 2,69,800-க்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டுள்ளது. மேலும் 5,99,200 க்கும் மேற்பட்டோர் உயர் பொது சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1988096

***

ANU/PKV/IR/RS/GK


(Release ID: 1988150) Visitor Counter : 86