பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டேராடூனில் உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023 தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 08 DEC 2023 3:34PM by PIB Chennai

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, இளம் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி அவர்களே, அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், வணிக உலகின் முக்கிய பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே! வணக்கம்!

தெய்வீக பூமியான உத்தராகண்டிற்கு வருவது என் இதயத்தில் அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், நான் பாபா கேதார்நாத்தை பார்வையிடச் சென்றபோது, 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் உத்தராகண்ட் தசாப்தம் என்று கூறினேன். எனது கூற்று தொடர்ந்து உண்மை என்று நிரூபணமாகி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருக்கும், உத்தராகண்ட் மாநிலத்தின் பெருமையுடன் இணைவதற்கும், அதன் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது. உத்தரகாசியில் உள்ள சுரங்கப்பாதையில் இருந்து புலம்பெயர்ந்த நமது சகோதரர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான வெற்றிகரமான இயக்கத்தை  வழிநடத்தியதற்காக மாநில அரசு உட்பட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

மகத்தான சாத்தியக்கூறுகள் நிறைந்த இந்த பூமி நிச்சயமாக உங்களுக்காகப்  பல முதலீட்டுக்  கதவுகளைத் திறக்கப் போகிறது. இன்று, வளர்ச்சி, பாரம்பரியம் ஆகிய இரண்டின் தாரக மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது, உத்தராகண்ட் அதற்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக நிற்கிறது.

நண்பர்களே,

இரட்டை இயந்திர அரசின் முன்னுரிமைகள் உத்தராகண்டிற்கு இரட்டை நன்மைகளைக் கொண்டு வருகின்றன, சுற்றுலாத் துறை இதற்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு. இன்று, இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரிடையே பாரதத்தை ஆராய முன்னெப்போதும் இல்லாத ஆர்வம் உள்ளது. நாங்கள் நாடு முழுவதும் கருப்பொருள் அடிப்படையிலான சுற்றுலாக்களை உருவாக்கி வருகிறோம். பாரதத்தின் இயற்கை மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இந்தப் பிரச்சாரத்தில், உத்தராகண்ட் சுற்றுலாவில் ஒரு வலுவான குறியீடாக  உருவெடுத்து வருகிறது. இயற்கை, கலாச்சாரம், பாரம்பரியம் என அனைத்தையும் அரசு வழங்குகிறது. இங்கு, யோகா, ஆயுர்வேதம், யாத்திரை, சாகச விளையாட்டுகள் மற்றும் பலவற்றிற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அவற்றை வாய்ப்புகளாக மாற்றுவதில்  உங்களைப் போன்ற சக ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நண்பர்களே,

மாறிவரும் காலத்தில், இன்று பாரதம் முழுவதும் ஒரு வேகமான மாற்ற அலை வீசுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், லட்சிய பாரதம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏராளமான மக்கள் தேவை மற்றும் பல சிரமங்களை எதிர்கொண்டனர். இப்போது, அந்தச் சிக்கல்கள் அனைத்திலிருந்தும் மீண்டு, வசதிகளுடன் இணைந்து, புதிய வாய்ப்புகளுடன் இணைந்துள்ளனர். அரசின் நலத்திட்டங்களால் கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இந்த கோடிக்கணக்கான மக்கள் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளனர். இன்று, நுகர்வு அடிப்படையிலான பொருளாதாரம் பாரதத்திற்குள் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு புறம், வறுமையில் இருந்து மீண்டு, அதன் தேவைகளுக்காக அதிகம் செலவழிக்கும் புதிய நடுத்தர வர்க்கம் உள்ளது. மறுபுறம், நடுத்தர வர்க்கம் உள்ளது, இது இப்போது இது தனது விருப்பமான பொருட்களுக்கு அதிக செலவு செய்கிறது. எனவே, நாட்டின் நடுத்தர வர்க்கத்தின் திறனை நாம் புரிந்துகொள்வது அவசியம். உத்தராகண்ட்டில் உள்ள சமூக வலிமை உங்களுக்காக ஒரு குறிப்பிடத்தக்க சந்தையையும் தயார் செய்கிறது.

நண்பர்களே,

நீங்களும், ஒரு வணிகமாக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள தயாரிப்புகளை இங்கே அடையாளம் காணலாம். எங்கள் சகோதரிகள், எஃப்.பி.ஓக்களின் சுய உதவிக் குழுக்களுடன் ஒத்துழைத்து, புதிய சாத்தியக்கூறுகளை ஆராயுங்கள். உள்ளூர் பொருட்களை உலகளாவியதாக மாற்ற இது ஓர்  அற்புதமான கூட்டாண்மையாக இருக்கலாம்.

நண்பர்களே,

பாரதத்திற்கு, இந்திய நிறுவனங்களுக்கு, இந்திய முதலீட்டாளர்களுக்கு இது முன்னெப்போதும் இல்லாத நேரம் என்று நான் நம்புகிறேன். அடுத்த சில ஆண்டுகளில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். எனது மூன்றாவது பதவிக்காலத்தில் உலக அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் நாடு இருக்கும் என்று நான் குடிமக்களுக்கு உறுதியளிக்கிறேன். ஒரு நிலையான அரசு, ஆதரவான கொள்கை அமைப்பு, சீர்திருத்தங்கள் மூலம் மாற்றப்பட்ட மனநிலை, வளர்ச்சியின் மீதான நம்பிக்கை - இந்த அனைத்து காரணிகளின் சங்கமம் முதல் முறையாக நிகழ்கிறது. எனவே, இதுதான் சரியான நேரம்,மிகச்  சரியான நேரம் என்று கூறுகிறேன். இது பாரதத்தின் நேரம். உத்தரகண்ட் மாநிலத்துடன் இணைந்து உங்கள் சொந்த வளர்ச்சிக்கு பங்களிக்குமாறும், உத்தராகண்டின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக மாறுமாறும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதும் சொல்வேன், எங்களுக்கு பல ஆண்டுகளாக ஒரு கற்பனை இருந்தது. மலையின் இளைஞர்களும், மலைகளின் நீரும் மலைகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இளைஞர்கள் பிழைப்புக்காக வேறு எங்காவது செல்கிறார்கள், தண்ணீர் வேறு இடங்களுக்கு செல்கிறது. ஆனால் இப்போது மலைகளின் வளர்ச்சிக்கு மலைகளின் இளைஞர்களும் பங்களிப்பார்கள் . மலைகளின் நீரும் மலைகளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும்.

நாங்கள் பேசுவது மட்டுமல்லாமல், நாங்கள் சொல்வதன் பின்னால் உறுதியாக நின்று அதை நிறைவேற்றுவோம் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். நீங்கள் அனைவரும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் இங்கே இருக்கிறீர்கள்; உத்தராகண்ட் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. பலர் குறிப்பிட்டுள்ளபடி, என் வாழ்க்கையை வடிவமைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் இந்த மண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்தப் புனித பூமியின் ஆசீர்வாதங்களை சுமப்பதன் மூலம் ஒரு தொடக்கத்தை உருவாக்க உங்களை அழைக்கிறேன்; . இது இந்த மண்ணின் ஆசீர்வாதம் என்பதால் உங்கள் வளர்ச்சிப் பயணத்தில் எந்தத் தடையும் இருக்காது.

 மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.

***

ANU/SMB/PKV/AG


(Release ID: 1987612) Visitor Counter : 95