தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரை: சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கும்
Posted On:
13 DEC 2023 2:54PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர திரு மோடியால் 2023, நவம்பர் 15 அன்று தொடங்கப்பட்ட வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரை, அடித்தள மக்களுக்குப் பயனளிக்கும் சுகாதார முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்கான ஒரு வலுவான திட்டமாக மாறியுள்ளது. ஐஇசி வாகனங்கள் வளர்ச்சியின் செய்தியை முன்னெடுத்துச் செல்கின்றன. அவற்றுடன் இணைந்து கிராமப் பஞ்சாயத்துகளில் சுகாதார முகாம்களும் நடத்தப்படுகின்றன. இம்முகாமில் இலவச மருத்துவ ஆலோசனைகள், காசநோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவ முகாம்கள் மூலம் பயனடைந்துள்ளனர். யாத்திரையின் போது, 26,752-க்கும் அதிகமான கிராமப் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு 2023, டிசம்பர் 12 நிலவரப்படி. 100 சதவீதம் முழுமையாக ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரையின் ஒரு பகுதியாக, ஆரோக்கிய இந்தியா முன்முயற்சியின் கீழ் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசின் முதன்மை சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் செயலியைப் பயன்படுத்தி ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. 2023, டிசம்பர் 12 வரை, 9.69 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் இந்தப் பயண முகாம்களில் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் அட்டை முகாம்களில் 1.53 லட்சத்துக்கும் அதிகமானோர் சேவைகளைப் பெற்றுள்ளனர்.
பயணவாகனங்கள் செல்லும் இடங்களில் மருத்துவ முகாம்களில் பங்கேற்பவர்களுக்குக் காசநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. காசநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் உயர் மருத்துவ வசதிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனர். இதுவரை 26.41 லட்சம் பேருக்குக் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ் காசநோயாளிகளுக்குப் பிற உதவிகளும் வழங்கப்படுகின்றன.
***
ANU/SMB/BS/RS/KPG
(Release ID: 1985901)
Visitor Counter : 176