பிரதமர் அலுவலகம்

'வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்' திட்டத்தை டிசம்பர் 11-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்


வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 தொலைநோக்குப் பார்வைக்கு நாட்டின் இளைஞர்கள் யோசனைகளை வழங்கும் ஒரு தளத்தை ஏற்படுத்தித் தருவதை முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளில் நடைபெறும் பயிலரங்குகளில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களிடையே பிரதமர் உரையாற்றுவார்

Posted On: 10 DEC 2023 1:02PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிசம்பர் 11, 2023 அன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் 'வளர்ச்சி அடைந்த இந்தியா @2047 : இளைஞர்களின் குரல்' என்ற திட்டத்தைத்  தொடங்கி வைக்கவிருக்கிறார். நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளில் நடைபெறும்  பயிலரங்குகளில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றுவார்.

நாட்டின் தேசிய திட்டங்கள், முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை உருவாக்குவதில் நாட்டின் இளைஞர்களைத் தீவிரமாக ஈடுபடுத்துவதே பிரதமரின் நோக்கமாகும். இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 'வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 : இளைஞர்களின் குரல்' முன்முயற்சி நாட்டின் இளைஞர்களுக்கு வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 தொலைநோக்குப்  பார்வைக்கு யோசனைகளை வழங்குவதற்கான ஒரு தளத்தை  அளிக்கும்.  வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 க்கான தங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ள இளைஞர்களை ஈடுபடுத்தும் செயல்முறையைத் தொடங்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த பயிலரங்குகள் இருக்கும்.

வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 என்பது,  சுதந்திரத்தின் நூற்றாண்டான  2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையாகும். பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது.

----------


ANU/AD/RB/DL



(Release ID: 1984697) Visitor Counter : 213