பிரதமர் அலுவலகம்

சர்வதேச பருவநிலை உச்சிமாநாட்டின்போது (சிஓபி-28) இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து தொழில் துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன

Posted On: 01 DEC 2023 8:29PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் 2024-26-ம் ஆண்டிற்கான தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் (லீட் ஐடி 2.0 - LeadIT 2.0) இரண்டாம் கட்ட செயல்பாடுகளை துபாயில் சர்வதேசப் பருவநிலை உச்சி மாநாட்டின்போது (சிஓபி -28) தொடங்கி வைத்தனர்.

இரு நாடுகளின் அரசுகள், தொழிற்சாலைகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களை இணைக்கக் கூடிய ஒரு தளத்தையும் இந்தியாவும் ஸ்வீடனும் அறிமுகப்படுத்தின. 

இந்த நிகழ்வின் போது பேசிய பிரதமர், தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் இரண்டாம் கட்டம் (லீட்ஐடி 2.0) பின்வருவனவற்றில் கவனம் செலுத்தும் என்று கூறினார்:

•    அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நியாயமான தொழில்துறை மாற்றம்
•    குறைந்த கார்பன் வெளியேற்ற தொழில்நுட்பத்தின் கூட்டு மேம்பாடு மற்றும் பரிமாற்றம்
•    தொழில்துறை மாற்றத்திற்காக வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு நிதி உதவி அளித்தல்

2019-ம் ஆண்டில் நியூயார்க்கில் நடந்த ஐநா பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டில் இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து லீட்ஐடி எனப்படும் தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தின.

******

ANU/AD/PLM/DL

 



(Release ID: 1982020) Visitor Counter : 48