பிரதமர் அலுவலகம்
சுவிஸ் கூட்டமைப்பு தலைவருடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
01 DEC 2023 8:01PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, துபாயில் 2023, 1 டிசம்பர் அன்று சிஓபி 28 நிகழ்வின் ஒரு பகுதியாக சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் திரு. அலைன் பெர்செட்டை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மக்களுடனான உறவுகள் உள்ளிட்ட தங்கள் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.
பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளையும் உள்ளடக்கியதாக இருதரப்பு விவாதங்கள் இருந்தன.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் மற்றும் உச்சிமாநாட்டின் வெற்றிக்காக பிரதமருக்கு, சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் பெர்செட் வாழ்த்து தெரிவித்தார்.
*******
ANU/AD/BS/DL
(रिलीज़ आईडी: 1981858)
आगंतुक पटल : 105
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam