பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான நிகழ்ச்சியில் 'பாலினத்தை உள்ளடக்கிய தகவல்தொடர்பு வழிகாட்டி'யை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி வெளியிட்டார்
प्रविष्टि तिथि:
29 NOV 2023 11:27AM by PIB Chennai
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி நேற்று (28.11.2023) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'பாலினத்தை உள்ளடக்கிய தகவல் தொடர்புக்கான வழிகாட்டியை' வெளியிட்டார்.
இந்த வழிகாட்டியை லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி, ஐ.நா. மகளிர் அமைப்பு, பில் -மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
சம்பந்தப்பட்டவர்களுடன் விரிவான கலந்தாலோசனைக்குப் பின்னர் இந்த வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. பாலினம் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் உள்ளடக்கிய தன்மையை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை இந்த வழிகாட்டி வழங்குகிறது.
இந்த வழிகாட்டி ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகளில் உள்ளது. இது உச்ச நீதிமன்றம் தெரிவித்த வழிமுறைகள் மற்றும் பிற தேசிய உலகளாவிய சிறந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த வழிகாட்டி அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஊடக வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினருக்கு உதவும்.
பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பது, நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திரபாய் முஞ்பாரா, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு இந்தேவர் பாண்டே, சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் செயலாளர் திரு கே.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், ஐ.நா. அமைப்புகளின் வல்லுநர்கள், தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதிகள், மற்றும் துறைசார்ந்த வல்லுநர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
ANU/SMB/PLM/AG/KPG
(रिलीज़ आईडी: 1980670)
आगंतुक पटल : 163