பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப் ) மல்டிரோல் போர் விமானமான தேஜஸ் பயணத்தைப் பிரதமர் நிறைவு செய்தார்

Posted On: 25 NOV 2023 1:07PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்திய விமானப்படையின் மல்டிரோல் போர் விமானமான தேஜஸ் பயணத்தை  வெற்றிகரமாக முடித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்:

"தேஜஸில் ஒரு பயணத்தை வெற்றிகரமாக முடித்தேன். இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு ஊக்கத்தை வளப்படுத்தியது. நமது நாட்டின் திறன்களில் எனது நம்பிக்கையைக் கணிசமாக அதிகரித்தது. மேலும் நமது  தேசிய திறனைப் பற்றி எனக்கு ஒரு புதிய பெருமையையும் நம்பிக்கையையும் அளித்தது."

“இன்று தேஜாஸ் விமானத்தில் பறக்கும் நான், நமது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தற்சார்பில்   உலகில் எவருக்கும் குறைவானவர்கள் இல்லை என்பதை மிகுந்த பெருமிதத்துடன் சொல்ல முடியும். இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனம் மற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்."

*****

ANU/SMB/DL


(Release ID: 1979704) Visitor Counter : 146