சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டம் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் சர்வதேச கிருஷ்ண உணர்வு சங்கம் (இஸ்கான்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
प्रविष्टि तिथि:
23 NOV 2023 3:24PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்தர் குமார், துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இஸ்கான் மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று புதுதில்லியில் போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டம்- சர்வதேச கிருஷ்ண உணர்வு சங்கம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இத்தகைய நடவடிக்கைகள் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை அடைவதற்கு ஊக்கமளிக்கும் என்றார். இஸ்கான் உடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் போன்றோரிடையே போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின் செய்தியைப் பரப்ப உதவும் என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள 550-க்கும் அதிகமான தன்னார்வ அமைப்புகள் மூலம் முறையான சிகிச்சை, விளம்பரம், சமூகத்தை சென்றடைதல் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை தமது அமைச்சகம் தொடர்ந்து நடத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்களிடையே வாழ்க்கைத் திறன்கள் மற்றும் போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தைக் குறைப்பது மட்டுமின்றி அதனை நிரந்தரமாக நிறுத்துவதும் ஆகும். ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் இதற்கான ஒவ்வொரு பாடப்பிரிவும் தீக்ஷா போர்ட்டலில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்த அமைச்சகம் ஒரு ஆண்டில் 300 மாவட்டங்கள், 30,000 பள்ளிகள், 10 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 2.4 கோடி மாணவர்களை சென்றடைய இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
3.37 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், 2.26 கோடிக்கும் அதிகமான பெண்கள் மற்றும் 3.27 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உட்பட 10.71 கோடிக்கும் அதிகமான மக்கள் போதைப்பொருள் இல்லாத இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர்.
***
ANU/PVK/SMB/AG/KRS
(रिलीज़ आईडी: 1979176)
आगंतुक पटल : 177