நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில், அரசியலமைப்பு விநாடி -வினா மற்றும் முகப்புரையின் இணையதள வாசிப்பில் பங்கேற்க நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

Posted On: 20 NOV 2023 12:19PM by PIB Chennai

கொண்டாடப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்புச்சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், கொண்டாடப்படுகிறது. இது லட்சியங்கள் மற்றும் கொள்கைகளை முன்னிலைப்படுத்துகிறது: மீண்டும் உறுதிப்படுத்துகிறது, இது நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் பங்களிப்பை நிலைநிறுத்துவதுடன், மதிப்பை அங்கீகரிக்கிறது.

அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில், நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அனைத்து மக்களையும் அரசியலமைப்பு வி விநாடி -வினா மற்றும் முன்னுரையின் இணையதள வாசிப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறது. அதிகபட்ச மக்கள் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக அமைச்சகம் இரண்டு இணையதளங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த இணையதளங்கள் பின்வருமாறு:

· அரசியலமைப்பின் முகவுரையை 22 அதிகாரபூர்வ மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் வாசித்தல்: https://readpreamble.nic.in/ ;

· இணையதள விநாடி – வினா  ("இந்தியா- இந்திய ஜனநாயகத்தின் தாய்): https://constitutionquiz.nic.in/

இந்த இணையதளங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியவை மற்றும் யார் வேண்டுமானாலும் பங்கேற்று சான்றிதழைப் பெறலாம். அவ்வாறு பெறும் சான்றிதழ்களை #SamvidhanDiwas பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிடலாம்.

 

***

ANU/SMB/BS/RS/KPG

 


(Release ID: 1978224) Visitor Counter : 158