பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும்: பிரதமர்


சித்தார் மீது சிங்கப்பூர் துணைப் பிரதமரின் ஈடுபாட்டிற்குப் பிரதமர் பாராட்டு

Posted On: 14 NOV 2023 9:43AM by PIB Chennai

சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்க்-இன் சித்தார் இசை முயற்சிக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு வோங்க்-இன் இடுகைக்கு பதிலளித்து திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:

"சித்தார் மீதான உங்கள் ஆர்வம் தொடர்ந்து வளர்ந்து, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கட்டும். இந்த இனிய முயற்சிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும்."

***

ANU/SMB/BR/KPG


(Release ID: 1976831) Visitor Counter : 137