தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது.
விழாவில் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்
சர்வதேசப் பிரிவுக்கு பெரும் வரவேற்பு, நாளைய படைப்பாளிகளுக்கான 600 பதிவுகள்
சிறந்த வெப் சீரிஸ் விருதுக்கு 15 ஓடிடி தளங்களிலிருந்து 10 மொழிகளில் 32 பதிவுகள்: அனுராக் தாக்கூர்
கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். உலக அளவில் 5வதுபெரிய சந்தையாக, இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை உள்ளது என்று அவர் கூறினார். இந்த சந்தை ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 20% வருடாந்திர வளர்ச்சியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் நாட்டின் ஒவ்வொரு இடத்தையும் கடந்து இப்போது உலகின் தொலைதூர இடங்களைச் சென்றடைகின்றன.
இந்த ஆண்டு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது, உலக சினிமாவின் பிரகாசமான நட்சத்திரமும், சினிமா உலகில் அளப்பரிய பங்களிப்பிற்காக அறியப்பட்டவருமான திரு மைக்கேல் டக்ளஸுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சர்வதேசப் பிரிவுக்குப் பெறப்பட்ட படங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பது இந்த விழாவின் மீதான சர்வதேச திரைப்படத் துறையின் ஈர்ப்பைக் காட்டுகிறது என்றும் திரு தாக்கூர் தெரிவித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓடிடி விருதுகள் குறித்து பேசிய அவர், கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின் ஓடிடி தொழில் இந்தியாவில் ஏற்றத்தைக் கண்டுள்ளது என்றும், இது ஆயிரக்கணக்கானவர்களை வேலைக்கு அமர்த்துகிறது என்றும் கூறினார். ஆண்டுதோறும் 28% வளர்ச்சி கொண்ட இத்துறையின் துடிப்பான வளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, ஓடிடி தளங்களில் சிறந்த உள்ளடக்கப் படைப்பாளிகளைக் கொண்டாடும் வகையில் அமைச்சகம் விருதினை அறிமுகப்படுத்தியுள்ளது. 15 ஓடிடி தளங்களில் இருந்து 10 மொழிகளில் மொத்தம் 32 பதிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் வெற்றி பெறுபவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
திரைப்படத் துறையில் ஸ்டார்ட்அப் சூழலை வலுப்படுத்தவும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் திறமைகளை அங்கீகரிக்கவும், கிரியேட்டிவ் மைண்ட்ஸ் ஆஃப் டூமாரோ முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இந்தப் பிரிவில் 600க்கும் அதிகமான பதிவுகள் உள்ளன என்றும், இந்த ஆண்டு 75 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டால், கடந்த 3 ஆண்டுகளில் வெற்றியாளர்களின் எண்ணிக்கை 225 ஆக உயரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு திரைப்பட விழாவுக்கான அனைத்து இடங்களும் அனைத்து வசதிகளையும், மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகலையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். பார்வையற்றோருக்கான ஆடியோ விளக்கம், காது கேளாதோருக்கான சைகை மொழி, பல மொழிகளில் உள்ளடக்கத்தை டப்பிங் செய்வது ஆகியவை அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்தின் அடையாளமாக இருக்கும்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா உலகின் மிகப்பெரிய திரைப்பட மற்றும் கலாச்சார விழாக்களில் ஒன்றாகும் என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தனது சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளார். சர்வதேச நடுவர் குழுவுக்குப் பிரபல திரைப்பட இயக்குநர் திரு சேகர் கபூர் தலைமை தாங்குகிறார் என்று அவர் பார்வையாளர்களிடம் தெரிவித்தார்.
54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்த ஒரு பார்வை இங்கே:
உலக சினிமாவில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது இவ்விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். தற்போது உலக சினிமாவின் மிகச்சிறந்த சர்வதேச நபர்களில் ஒருவரான ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ், இந்த மதிப்புமிக்க விருதைப் பெற தனது மனைவியும் புகழ்பெற்ற நடிகையுமான கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸுடன் பங்கேற்பார்.
திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய "மைக்கேல் டக்ளஸ்", 2 ஆஸ்கர் விருதுகள், 5 கோல்டன் குளோப் விருதுகள், ஒரு பிரைம் டைம் எம்மி விருது மற்றும் எண்ணற்ற பிற கௌரவங்களைப் பெற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டில், 76 வது கேன்ஸ் விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான பால்ம் டி'ஓர் விருதினைப் பெற்றார். 'வால் ஸ்ட்ரீட்' படத்தில் கோர்டன் கெக்கோவாக அகாடமி விருது வென்ற நடிப்பு முதல் ஃபேட்டல் ஈர்ப்பு, தி அமெரிக்கன் பிரசிடென்ட், பேஸிக் இன்ஸ்டிங்க்ட், டிராபிக் மற்றும் ரொமான்சிங் தி ஸ்டோன் போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்கள் வரை அவர் தனது தனித்துவமான பாத்திரங்களுக்காக அறியப்படுகிறார். மைக்கேல் ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு சிறந்த தயாரிப்பாளரும் கூட. இவரது படைப்புகளில் ஒன் ஃப்ளைட் ஓவர் தி குயில்ஸ் நெஸ்ட் மற்றும் தி சைனா சிண்ட்ரோம் போன்ற சக்திவாய்ந்த திரைப்படங்கள் அடங்கும். திரு டக்ளஸ் மனிதாபிமான முயற்சிகளுக்குப் பெயர் பெற்றவர். மனிதகுலத்தை பாதிக்கும் அணு மற்றும் உயிரியல் அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் அணுசக்தி அச்சுறுத்தல் முன்முயற்சி அமைப்பின் குழுவில் அவர் உள்ளார். 1998 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராகவும் நியமிக்கப்பட்டார்.
ஐநாக்ஸ் பாஞ்சிம் (4), மக்வினெஸ் பேலஸ் (1), ஐநாக்ஸ் போர்வோரிம் (4), இசட் ஸ்கொயர் சாம்ராட் அசோக் (2) ஆகிய 4 இடங்களில் 270-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
54வதுஐ.எஃப்.எஃப்.ஐ இன் 'சர்வதேச பிரிவில்' 198 திரைப்படங்கள் இடம்பெறும். இந்தியன் பனோரமா' பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 25 திரைப்படங்கள் மற்றும் 20 கதையம்சமற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. கதையம்சப் பிரிவில் தொடக்கப் படம் மலையாளத் திரைப்படமான ஆட்டம், மற்றும் கதையம்சமற்ற பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த ஆண்ட்ரோ ட்ரீம்ஸ் உள்ளது.
சிறந்த வெப் சீரிஸ் (ஓடிடி) விருது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓடிடி தளங்களின் செழிப்பான உள்ளடக்கம் மற்றும் அதன் படைப்பாளிகளை அங்கீகரித்தல், ஊக்குவித்தல் மற்றும் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு, 15 ஓடிடி தளங்களிலிருந்து 10 மொழிகளில் 32 உள்ளீடுகள் பெறப்பட்டுள்ளன. வெற்றி பெறும் தொடருக்கு சான்றிதழ்களும், ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.இது நிறைவு விழாவில் அறிவிக்கப்படும்.
சிறந்த திரைப்பட விருதான தங்க மயில் மற்றும் ரூ .40 லட்சம் பரிசுக்குப் போட்டியிட 15 திரைப்படங்கள் (12 சர்வதேச + 3 இந்திய) தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த படம் தவிர, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் (ஆண்), சிறந்த நடிகர் (பெண்), சிறப்பு ஜூரி பரிசு ஆகிய பிரிவுகளிலும் வெற்றியாளர்களை நடுவர்கள் தேர்வு செய்வார்கள்.
சிறந்த திரைப்பட அறிமுக இயக்குனர் பிரிவில் வெள்ளி மயில், 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழுக்காக 5 சர்வதேச + 2 இந்திய திரைப்படங்கள் போட்டியிடும்.
சர்வதேச நடுவர் குழு: சேகர் கபூர் (தலைவர்), புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர், ஜோஸ் லூயிஸ் அல்கைன், ஸ்பானிஷ் ஒளிப்பதிவாளர் விருது பெற்ற ஜெரோம் பைலார்ட், மார்சே டு கேன்ஸின் புகழ்பெற்ற முன்னாள் தலைவர், பிரான்ஸைச் சேர்ந்த சிறந்த திரைப்பட தயாரிப்பாளர் கேத்தரின் டஸ்சார்ட்; ஆஸ்திரேலியாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஹெலன் லீக் உறுப்பினர்கள்
விழாவின் அனிமேஷன் பிரிவுசர்வதேச மற்றும் இந்திய அனிமேஷன் திரைப்படங்களைத் தொகுக்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இது போலந்தின் அதிகாரப்பூர்வ ஒசார் நுழைவு - தி ஃபார்மிட்ஸ் (டி.ஆர்: டி.கே.வெல்ச்மேன், ஹக் வெல்ச்மேன்) உள்ளிட்டஅழகியல் ரீதியாக மற்றும் விவரிப்பு ரீதியாக அனிமேஷன் திரைப்படங்களின் விரிவான வரிசையைக் கொண்டுள்ளது, இதில் இந்திய அனிமேஷன் திரைப்படங்களும் அடங்கும்.
யுனெஸ்கோ திரைப்படங்கள்: யுனெஸ்கோவின் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள்: 7 சர்வதேச + 3 இந்தியத் திரைப்படங்கள்.
மாஸ்டர் வகுப்புகள் மற்றும் உரையாடல் அமர்வுகள்: புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் நடிகர்களுடன் 20 க்கும் மேற்பட்ட 'மாஸ்டர் கிளாஸ்' மற்றும் 'இன் கான்வர்சேஷன்' அமர்வுகளுடன், இது ஒரு உற்சாகமான வாரமாக இருக்கும். மைக்கேல் டக்ளஸ், பிரெண்டன் கால்வின், பிரிலான்டே மெண்டோசா, சன்னி தியோல், ராணி முகர்ஜி, வித்யா பாலன், ஜான் கோல்ட்வாட்டர், விஜய் சேதுபதி, சாரா அலி கான், பங்கஜ் திரிபாதி, நவாசுதீன் சித்திக், கெய்கே மேனன், கரண் ஜோஹர், மதுர் பண்டார்கர், மனோஜ் பாஜ்பாய், கார்த்திகி கோன்சால்வ்ஸ், போனி கபூர், அல்லு அரவிந்த், தியோடர் க்ளூக், குல்ஷன் குரோவர் மற்றும் பல தேசிய மற்றும் சர்வதேச நட்சத்திரங்கள் இதில் பங்கேற்பார்கள்
இந்திய கலாச்சாரங்களைக் கொண்டாடுவதற்காக (5 நாட்கள்) -திரைப்படத் திரையிடல் .
22ம் தேதி: கிழக்கு: பெங்காலி, ஒரியா, அசாமி, மணிப்பூரி மற்றும் வடகிழக்கு மொழிகள்
23ம் தேதி: தெற்கு1: தமிழ் & மலையாளம்
24ம் தேதி: வடக்கு: பஞ்சாபி, டோக்ரி, போஜ்புரி, ராஜஸ்தானி, உருது, சத்தீஸ்கர்
25ம் தேதி: மேற்கு: கொங்கணி, மராத்தி, குஜராத்தி
26ம் தேதி: தெற்கு 2: கன்னடம் & தெலுங்கு
தினசரி அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகளை ஐ.எஃப்.எஃப்.ஐ https://iffigoa.org/ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் காணலாம்.
மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (என்.எஃப்.டி.சி) கோவா மாநில அரசுடன் இணைந்து அதன் பொழுதுபோக்கு சங்கம் (ஈ.எஸ்.ஜி) மூலம் 54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை (ஐ.எஃப்.எஃப்.ஐ) 2022 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடத்துகிறது.
இந்த வருடாந்திர திரைப்பட விழா பல ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த மற்றும் இந்திய சினிமாவின் தாயகமாக இருந்து வருகிறது, இதில் இந்தியாவின் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் பிரதிநிதிகள், விருந்தினர்கள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1975005
******
ANU/PKV/SMB/KRS
(Release ID: 1975094)
Visitor Counter : 211
Read this release in:
Assamese
,
Marathi
,
Kannada
,
English
,
Hindi
,
Manipuri
,
Gujarati
,
Malayalam
,
Khasi
,
Urdu
,
Bengali-TR
,
Bengali
,
Odia
,
Telugu