பாதுகாப்பு அமைச்சகம்

லக்னோவில் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' நிகழ்ச்சி; பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

Posted On: 31 OCT 2023 12:18PM by PIB Chennai

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ( எச்..எல்) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 'ஒற்றுமைக்கான ஓட்டம்' நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.

1.5 கி.மீ ஓட்டத்தை ஹஸ்ரத்கஞ்சில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே  இருந்து பாதுகாப்பு அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம்  கே.டி.சிங் பாபு விளையாட்டரங்கில்  நிறைவடைந்தது.

பள்ளி மாணவர்கள், என்.சி.சி அணியினர், தடகள வீரர்கள்ஓட்டப்பந்தய ஆர்வலர்கள், எச்..எல் வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் ஓட்டத்தில் பங்கேற்றனர்.

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங், தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி செய்துவைத்தார்பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சுதந்திரம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களித்தவர்களை நினைவுகூரும் ஒரு வாய்ப்பாக தேசிய ஒற்றுமை தினம் திகழ்கிறது என்றார்.

தேசிய ஒருமைப்பாட்டு தினம், தேசத்தின் ஒற்றுமைக்கு உறுதியேற்க செய்வதற்கும், 'ஒன்று பட்ட இந்தியா சிறந்த இந்தியா கட்டமைப்பதில் பணியாற்றுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர், சுதேச சமஸ்தானங்களை இந்தியக் குடியரசுடன் ஒருங்கிணைப்பதை உறுதி செய்வதில் அவரது தொலைநோக்குப் பார்வைராஜீய திறன்கள்இந்திய குடிமைப் பணிகள்  கட்டமைப்பை உருவாக்குவது போன்ற பங்களிப்புகளைப் பாராட்டினார்.

"சர்தார் வல்லபாய் படேலின் முயற்சிகள் இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்தன. 2014 ஆம் ஆண்டில் எங்கள் அரசு ஆட்சிக்கு வந்து அவரது பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட முடிவு செய்யும் வரை அவரது பங்குக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 'எனது இளம் இந்தியா இயக்கம்' குறித்து திரு. ராஜ்நாத் சிங் கூறுகையில், இந்த முன்முயற்சி இளைஞர்கள் முன்வந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் பங்கேற்க ஒரு வாய்ப்பை வழங்கும் என்றார். இந்த வேலைத்திட்டத்திற்கு மக்கள் முன்வந்து தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பாடுபட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகின் மிகப்பெரிய சிலையான ஒற்றுமை சிலையை குஜராத்தின் கெவாடியாவில் நிறுவுவதற்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முன்முயற்சியை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். சர்தார் வல்லபாய் படேல் இந்திய ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கிறார், அவரது முயற்சிகள் தேசிய ஒருமைப்பாட்டு செய்தியை முன்னெடுத்துச் செல்ல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர்கள் திரு கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் ஸ்ரீ பிரஜேஷ் பதக், உத்தரப்பிரதேச அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள்மத்திய, மாநில அரசுகளின்  அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

-----

ANU/SMB/BS/KPG



(Release ID: 1973317) Visitor Counter : 117