பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 100 மீட்டர்- டி37 பிரிவில் ஷ்ரேயன்ஷ் திரிவேதி வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2023 11:26AM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 100 மீட்டர்-டி37 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்ரேயான்ஷ் திரிவேதிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஆடவர் 100 மீட்டர் டி-37 பிரிவில் வெண்கலம் வென்ற ஷ்ரேயன்ஷ் திரிவேதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது ஓர் அற்புதமான சாதனை!

அவர் தொடர்ந்து புதிய எல்லைகளை நோக்கிச் செல்லட்டும்”.

***


ANU/SMB/IR/RS/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1971479) வருகையாளர் எண்ணிக்கை : 154