இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2023 7:04PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் மணீஷ் நர்வாலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
நர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனையை அவர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அசைக்கமுடியாத திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது."
***
ANU/AD/SMB/DL