பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் ஆடவர் - 60 கிலோ ஜே1 ஜூடோ பிரிவில் கபில் பார்மர் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

Posted On: 23 OCT 2023 6:33PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் - 60 கிலோ ஜே1 ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கபில் பார்மருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:



"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஜூடோ- 60 கிலோ ஜே1 பிரிவில் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம்  வென்ற கபில் பார்மருக்கு வாழ்த்துகள். அவரது விடாமுயற்சியும், வீரமும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அவர் தொடர்ந்து வெற்றி பெறவும், எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் கிடைக்கவும் வாழ்த்துகிறேன்"

***

(Release ID: 1970191)

ANU/AD/IR/RS/KRS



(Release ID: 1970269) Visitor Counter : 86