பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு பைரோன் சிங் ஷெகாவத்தின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

Posted On: 23 OCT 2023 1:27PM by PIB Chennai

இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு பைரோன் சிங் ஷெகாவத்தின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் பைரோன் சிங் முக்கியப் பங்கு வகித்தார் என்றும், நாடாளுமன்ற விவாதங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டிற்கும் அவரது பதவிக்காலம் நினைவுகூரப்படுகிறது என்றும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். குடியரசு துணைத்தலைவரு டனான உரையாடலின் சில காட்சிகளையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் - இது மரியாதைக்குரிய அரசியல்வாதி திரு பைரோன் சிங் ஷெகாவத் அவர்களின் 100-வது பிறந்த நாள். அவரது முன்மாதிரியான தலைமை மற்றும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். அரசியல் களத்திலும், அனைத்துத் தரப்பு மக்களாலும் விரும்பப்பட்டவர்.

அவருடனான எனது உரையாடல்களின் சில காட்சிகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.

"பைரோன் சிங் அவர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டத் தலைவர், ஒரு திறமையான நிர்வாகி. ராஜஸ்தானை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்ற சிறந்த முதலமைச்சராக அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். ராஜஸ்தானின் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அவர் கவனம் செலுத்தினார். கிராமப்புற வளர்ச்சியை மேலும் மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் என்ற முறையில், நமது ஜனநாயகக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் பைரோன் சிங் முக்கியப் பங்கு வகித்தார். நாடாளுமன்ற விவாதங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்காக அவரது பதவிக்காலம் நினைவுகூரப்படுகிறது. அவரது மதிநுட்பமும், நகைச்சுவையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவுகூரப்படுகின்றன.

பைரோன் சிங் அவர்களுடன் உரையாடிய எண்ணற்ற நினைவுகள் என்னிடம் உள்ளன. 1990-களின் முற்பகுதியில் நான் கட்சி அமைப்பிற்காகப் பணியாற்றிய நேரங்களும், ஏக்தா யாத்திரையும் இதில் அடங்கும். நான் அவரை சந்திக்கும் போதெல்லாம், நீர் சேமிப்பு, வறுமை ஒழிப்பு போன்ற அம்சங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்வேன்.

2001-ல் நான் குஜராத் முதலமைச்சரானேன், ஓராண்டுக்குப் பின், பைரோன் சிங் இந்தியாவின் குடியரசு துணைத்தலைவரானார். அந்த ஆண்டுகளில் அவரது தொடர்ச்சியான ஆதரவைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி. 2005-ம் ஆண்டு நடைபெற்ற துடிப்புமிகு குஜராத் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அவர், குஜராத்தில் நாங்கள் செய்து வரும் பணிகளைப் பாராட்டினார்.

நான் எழுதிய ஆங்க் ஆ தன்யா சே புத்தகத்தையும் அவர் வெளியிட்டிருந்தார் - அந்த நிகழ்ச்சியின் ஒரு படம் இதோ. இன்று, நமது தேசத்திற்கான பைரோன் சிங் அவர்களின்  தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும், ஒவ்வொரு இந்தியரும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதையும், இந்தியாவின் வளர்ச்சியை பிரகாசிக்கச் செய்யவும் வளப்படுத்தவும் ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவதையும் உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

***

 

ANU/AD/SMB/AG/KPG


(Release ID: 1970111) Visitor Counter : 126