கூட்டுறவு அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, புதுதில்லியில் ஏற்றுமதிக்கான தேசிய கூட்டுறவு நிறுவனம் (என்.சி.இ.எல்) நாளை ஏற்பாடு செய்துள்ள 'கூட்டுறவு ஏற்றுமதி குறித்த தேசிய கருத்தரங்கில்' உரையாற்றுகிறார்

Posted On: 22 OCT 2023 1:52PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷாபுதுதில்லியில்   ஏற்றுமதிக்கான தேசிய கூட்டுறவு நிறுவனம் (என்.சி.இ.எல்) ஏற்பாடு செய்துள்ள 'கூட்டுறவு ஏற்றுமதி குறித்த தேசிய கருத்தரங்கில்' நாளை உரையாற்றுகிறார். என்.சி.இ.எல்லின் லோகோ, வலைத்தளம் மற்றும் கையேட்டை திரு அமித் ஷா வெளியிடுகிறார்.  என்.சி.இ.எல் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்களையும் அவர்  வழங்குகிறார். ஏற்றுமதி சந்தைகளுடன் இணைப்பதற்கு கூட்டுறவு அமைப்புகளை வழிநடத்துதல், இந்திய வேளாண் ஏற்றுமதியின் சாத்தியக்கூறுகள் மற்றும் கூட்டுறவுகளுக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.

கூட்டுறவுத் துறையின் ஏற்றுமதிக்கான ஒரு குடை அமைப்பாக செயல்பட தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தை திரு அமித் ஷா வலியுறுத்தியதைத் தொடர்ந்து, என்.சி.இ.எல் உருவானது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழும், கூட்டுறவு அமைச்சரின் திறமையான வழிகாட்டுதலின் கீழும், கூட்டுறவு அமைச்சகம் கடந்த 27 மாதங்களில் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த 54 முன்முயற்சிகளை எடுத்துள்ளது. கூட்டுறவுகள் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிக்க தேசிய அளவிலான கூட்டுறவு நிறுவனத்தை அமைப்பது அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும், இது மோடி அரசாங்கத்தின் "சகார் சே சம்ரிதி" என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும். 

ஏற்றுமதிக்கான தேசிய கூட்டுறவு லிமிடெட் என்பது பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுத் துறை ஏற்றுமதிகளுக்காக புதிதாக நிறுவப்பட்ட குடை அமைப்பாகும்விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை உள்ளடக்கியது, இதன் மூலம் 2025ஆம் ஆண்டிற்குள் அதன் வருவாயை தற்போதைய அளவான சுமார் 2,160 கோடி ரூபாயிலிருந்து இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

ரூ.2,000 கோடி அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்ட என்.சி.இ.எல்., அமைப்பில், ஏற்றுமதியில் ஆர்வம் உள்ள, தொடக்க நிலை முதல் தலைமை வரை உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களும் உறுப்பினராக தகுதி பெற்றுள்ளன. நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் பரந்த சந்தைகளை அணுகுவதன் மூலம் இந்திய கூட்டுறவுத் துறையில் கிடைக்கும் உபரிகளை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்து கூட்டுறவு அமைச்சக அதிகாரிகள் விளக்கமளிக்கும் நிகழ்ச்சியுடன் கருத்தரங்கம் தொடங்குகிறது. கருத்தரங்கின் இரண்டாம் பாதியில் ஏற்றுமதி சந்தைகளுடன் இணைப்பதற்காக கூட்டுறவுகளை வழிநடத்துதல், இந்திய வேளாண் ஏற்றுமதியின் திறன் மற்றும் கூட்டுறவுகளுக்கான வாய்ப்புகள், இந்தியாவை உலகின் பால் வள மையமாக மாற்றுதல் மற்றும் கூட்டுறவு துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல தலைப்புகளில் தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும்.

கூட்டுறவு ஏற்றுமதி குறித்த தேசிய கருத்தரங்கில் என்.சி.இ.எல்., கூட்டுறவு உறுப்பினர்கள், தேசிய கூட்டுறவு இணையங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு துறைகளின் பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். ஏராளமான கூட்டுறவு உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்களும் ஆன்லைன் மூலம் இணைவார்கள்.  

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எஃப் - அமுல்), இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு (இப்கோ), கிருஷாக் பாரதி கூட்டுறவு (கிரிப்கோ) மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (நாஃபெட்) மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி) ஆகிய நான்கு முன்னணி கூட்டுறவு நிறுவனங்கள் கூட்டாக என்.சி.இ.எல் நிறுவனத்தை மேம்படுத்தியுள்ளன.

***

ANU/AD/PKV/DL



(Release ID: 1969902) Visitor Counter : 135