உள்துறை அமைச்சகம்
1947 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக, இந்த ஆண்டு காஷ்மீரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஷர்தா கோயிலில் நவராத்திரி பூஜைகள் நடைபெற்றிருப்பது ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா கூறியுள்ளார்
प्रविष्टि तिथि:
16 OCT 2023 4:00PM by PIB Chennai
1947 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக, இந்த ஆண்டு காஷ்மீரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஷர்தா கோயிலில் நவராத்திரி பூஜைகள் நடைபெற்றிருப்பது ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, ஆண்டின் தொடக்கத்தில், சைத்ரா நவராத்திரி பூஜை நடத்தப்பட்டது, இப்போது ஷர்தியா நவராத்திரி பூஜையின் மந்திரங்கள் சன்னதியில் ஒலிக்கின்றன. புனரமைப்புக்குப் பிறகு 2023 மார்ச் 23 அன்று கோயிலைத் தாம் மீண்டும் திறந்தது அதிர்ஷ்டம் என்று திரு அமித் ஷா கூறினார். இது பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதைக் குறிப்பது மட்டுமல்லாமல், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நமது நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சார சுடர் புத்துயிர் பெறுவதையும் குறிக்கிறது.
***
ANU/SMB/IR/AG/KPG
(रिलीज़ आईडी: 1968181)
आगंतुक पटल : 189