உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தனது தொகுதியில் உள்ள அங்கன்வாடிகுழந்தைகளை விளையாட்டு மண்டலத்துக்கு அழைத்துச் சென்றார்

प्रविष्टि तिथि: 14 OCT 2023 5:18PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா தனது மக்களவைத் தொகுதியான காந்திநகரில் உள்ள அங்கன்வாடி மையங்களின் குழந்தைகளை விளையாட்டு மண்டலத்திற்கு இன்று அழைத்துச் சென்றார்.

இது தொடர்பாக திரு. அமித்ஷா தனது சமூக ஊடக ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது;

“இன்று எனது மக்களவைத் தொகுதியின் அங்கன்வாடி மையங்களின் குழந்தைகளை விளையாட்டு மண்டலத்திற்கு அழைத்துச் சென்றேன். குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்”.

“மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சரும் எம்.பி.யுமான, எனது மக்களவைத் தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு வசதி வாய்ப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதே எனது முயற்சி. இதற்காக, அவர்களுக்கு நல்ல கல்வி, சத்தான உணவு, விளையாட்டுப் பொருட்களை வழங்குதல், விளையாட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் இந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன்.”

***

ANU/AD/BS/DL


(रिलीज़ आईडी: 1967728) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada