பிரதமர் அலுவலகம்
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணிக்குப் பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 OCT 2023 10:12PM by PIB Chennai
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக இந்தியக் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் மறக்க முடியாத வெற்றியைப் பெற்ற நமது கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அற்புதமான வெற்றியுடன் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்கிறது. அணியினருக்கு வாழ்த்துக்கள்."
***
(Release ID: 1966858)
ANU/SMB/BS/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1967550)
வருகையாளர் எண்ணிக்கை : 139
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam