தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்- 2023 அட்டவணை வெளியீடு

Posted On: 09 OCT 2023 3:23PM by PIB Chennai

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்குப் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பருவநிலை, கல்வி மற்றும்  தேர்வு நடைமுறைகள், முக்கிய திருவிழாக்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை, மத்திய ஆயுத காவல் படைகளின் இருப்பு போன்ற அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு தேர்தல் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் படி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் நவம்பர் 7-ம் தேதியும்,  2-ம் கட்டமாக 70 தொகுதிகளில் நவம்பர்17-ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் அக்டோபர் 13ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறதுமனுக்களை தாக்கல் செய்ய 20ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் அக்டோபர் 21-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 23-ம் தேதி கடைசி நாளாகும்.

 

சத்தீஸ்கர் இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெறும் 70 தொகுதிகளில் அக்டோபர் 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறதுமனுக்களை தாக்கல் செய்ய 30-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் அக்டோபர் 31-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும்.

 

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் அக்டோபர் 13-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறதுமனுக்களை தாக்கல் செய்ய 20ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் அக்டோபர் 21-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 23-ம் தேதி கடைசி நாளாகும்.

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அனைத்து 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் அக்டோபர் 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறதுமனுக்களை தாக்கல் செய்ய 30-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் அக்டோபர் 31-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும்.

 

ராஜஸ்தானில்  அனைத்து 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் அக்டோபர் 30-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறதுமனுக்களை தாக்கல் செய்ய நவம்பர் 6-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் நவம்பர் 7-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 9-ம் தேதி கடைசி நாளாகும்.

 

தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இம்மாநிலத்தில் நவம்பர் 3-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறதுமனுக்களை தாக்கல் செய்ய நவம்பர் 10-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாகும்.

 

5 மாநிலங்களிலும்  டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் அறிவிக்கப்படும். டிசம்பர் 5-ம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதையடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

 

***

(Release ID: 1965928)

SMB/ANU/PLM/RS/KRS




(Release ID: 1966089) Visitor Counter : 153