பிரதமர் அலுவலகம்
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அபய் சிங் மற்றும் அனாஹத் சிங்குக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2023 7:15PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அபய் சிங் மற்றும் அனஹத் சிங்குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
"ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்ற அபய்சிங் (@abhaysinghk98), அனஹத் சிங்குக்கு (@Anahat_Singh13) வாழ்த்துகள்! இது உண்மையிலேயே அற்புதமான செயல்திறன். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்"
***
ANU/PKV/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1965338)
வருகையாளர் எண்ணிக்கை : 127
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam