பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 05 OCT 2023 10:54PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே!

இன்று, 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. குடிநீர், எரிவாயு குழாய், 4 வழிச்சாலை என எதுவாக இருந்தாலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் திட்டங்கள் இவை. இதனால் இங்குள்ள விவசாயிகள் நிச்சயம் பயனடைவார்கள்; புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகள் இங்கு அமைக்கப்படும், நமது இளைஞர்களுக்கும் இங்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, சகோதர சகோதரிகளே,

2014-ம் ஆண்டுக்குப் பிறகு, நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தபோது, காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்ட ஊழல் நடைமுறைகளை மாற்றுவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கினோம், ஊழலையும் ஒழிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கினோம். சுமார் 11 கோடி போலி பெயர்களை நீக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.

இந்த 11 கோடி போலிப் பெயர்களைப் பயன்படுத்தி உண்மையான பயனாளிகள், ஏழை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் கருவூலம் சூறையாடப்பட்டது. 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, மோடி எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டார். இவர்கள் கோபப்படுவதற்குக் காரணம், அவர்களின் கமிஷன் நிறுத்தப்பட்டதுதான். மோடி வந்து எல்லாவற்றையும் தீர்த்து வைத்தார். ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கவும் விடமாட்டேன், காங்கிரஸ் தலைவர்களின் கஜானாவை நிரப்பவும் விடமாட்டேன். ஜன்தன்- ஆதார், மொபைல் என மும்மூர்த்திகளை உருவாக்கி, காங்கிரசின் ஊழல் அமைப்பை அழித்தோம். இன்று, இந்த மும்மூர்த்திகளால், 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திருடப்படாமல் சேமிக்கப்பட்டுள்ளது.

இன்று பாத்தின் நம்பிக்கை புதிய உச்சத்தில் உள்ளது. விளையாட்டு மைதானம் முதல் வயல்வெளி வரை பாரதக் கொடி உயரமாக அசைந்து கொண்டிருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதில் நாம் பாத்தின் அற்புதமான செயல்பாட்டைப் பார்க்கிறோம். இன்று நாட்டின் ஒவ்வொரு இளைஞனும் பாரதத்தின் இளைஞர்களுக்கான காலகட்டம் இது என்று உணர்கிறார்கள். இந்தக் காலம் பாரதத்தின் இளமைக் காலம். இளைஞர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது, வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான ஆர்வமும் அதிகரிக்கிறது. அதனால்தான் ஜி 20 போன்ற பிரமாண்டமான உலக நிகழ்வுகளை இந்தியா மிகவும் பெருமையுடன் ஏற்பாடு செய்ய முடிகிறது. அதனால்தான் இந்தியாவின் சந்திரயான் வேறு எந்த நாடும் அடைய முடியாத இடத்தை அடைகிறது. அதனால்தான் உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற மந்திரம் வெகுதொலைவில் எதிரொலிக்கத் தொடங்குகிறது. ஒருபுறம் இந்த நாடு சந்திரயானை அனுப்பியது, மறுபுறம், காந்தி ஜெயந்தி அன்று, அக்டோபர் 2 ஆம் தேதி, டெல்லியில் உள்ள ஒரு கதர் கடை ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு மேல் பொருட்களை விற்றது. இதுதான் நாட்டின் பலம். இந்தச் சுதேசி உணர்வு, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் இந்த உணர்வு இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து வருகிறது. எனது நாட்டின் இளைஞர்கள், எனது நாட்டின் மகன்கள் மற்றும் மகள்கள் இந்த முயற்சியில் தலைமை ஏற்றுள்ளனர். அதனால்தான் ஸ்டார்ட் அப் உலகில் பாரத இளைஞர்கள் அதிசயங்களை நிகழ்த்தி வருகின்றனர். அதனால்தான் பாரதம் தூய்மையாக இருக்க இவ்வளவு சக்திவாய்ந்த உறுதிமொழியை எடுக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி நாட்டில் தொடங்கப்பட்ட தூய்மை இயக்கத்தில், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன! அந்த தூய்மைப் பணியில் நாட்டின் 9 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து துடைப்பங்களை எடுத்து நாட்டில் உள்ள சாலைகள் மற்றும் பூங்காக்களை சுத்தம் செய்தனர். மத்திய பிரதேச மக்களும், இளைஞர்களும் இன்னும் பல அற்புதங்களை செய்துள்ளனர். தூய்மையில் மத்தியப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டிலேயே மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த உணர்வை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில், ம.பி.,யை முடிந்தவரை பல துறைகளில் முதலிடத்தில் வைத்திருக்க வேண்டும்.

என் குடும்ப உறுப்பினர்களே,

பிஜேபி அரசு ஏழைகளின் அரசு. சிலர் தங்கள் ஊழல் மற்றும் சுயநலத்தை அதிகரிக்க அனைத்து வகையான தந்திரங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் வளர்ச்சியில் ம.பி., முதலிடத்தில் இருக்கும் என்பது மோடியின் உத்தரவாதம். மோடியின் பாஜக அரசாங்கத்தின் இந்த உறுதியை மகாகௌஷலும், மத்தியப் பிரதேசமும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். வீர ராணி துர்காவதி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மரியாதையை செலுத்துகிறேன். எங்களை ஆசீர்வதிக்க நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்துள்ளீர்கள், உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ராணி துர்காவதி என்று சொல்வேன், நீங்கள் அமர் ரஹே, அமர் ரஹே என்று சொல்வீர்கள்! ராணி துர்காவதி - அமர் ரஹே, அமர் ரஹே. இந்தக் குரல் மத்தியப் பிரதேசம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.

ராணி துர்காவதி - அமர் ரஹே, அமர் ரஹே.

ராணி துர்காவதி - அமர் ரஹே, அமர் ரஹே.

ராணி துர்காவதி - அமர் ரஹே, அமர் ரஹே.

 

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

மிகவும் நன்றி.

பொறுப்புத்துறப்பு: பிரதமர் இந்தியில் உரை நிகழ்த்தினார். இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு மட்டுமே

***

(Release ID: 1964852)

ANU/PKV/BS/AG/KRS



(Release ID: 1965180) Visitor Counter : 93