சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 இன் கீழ் 341 செயல்பாடுகளை சுரங்க அமைச்சகம் மேற்கொள்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2023 10:17AM by PIB Chennai

சுரங்க அமைச்சகம் அதன் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் துறை அமைப்புகளுடன் இணைந்து அரசு அலுவலகங்களில் தூய்மையை முன்னெடுக்கவும், பணியிட சூழலை தரம்  உயர்த்துவதற்கும் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 ஐ கடைப்பிடித்து வருகிறது.

சுரங்க அமைச்சகத்தின் செயலாளர், செப்டம்பர் 30 அன்று அனைத்து கள அலுவலகங்களுடன் காணொலி மூலம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 பணிக்காக அனைத்து அலுவலகங்களையும் தயார்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். பல்வேறு பிரிவுகளின் கீழ் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, சுத்தம் செய்வதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன்படி சுரங்க அமைச்சகம் மற்றும் பிற பிரிவுகளில் 341 செயல்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அமைச்சகமும் அதன் கீழ் உள்ள அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 இன் போது, சாஸ்திரி பவனின் பிரதான நுழைவாயில் மற்றும் நடைபாதைகள் உள்ளிட்ட அலுவலக வளாகங்களை புதுப்பிக்கும் பணிகளை சுரங்க அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

இந்திய சுரங்க பணியகமும் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 –கடைப்பிடித்து வருகிறது. உரக் குழிகளை உருவாக்குதல் மற்றும் ஒரு மூலிகை தாவர தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட  தோட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

**

ANU/PKV/BS/AG/ KV


(வெளியீட்டு அடையாள எண்: 1964965) வருகையாளர் எண்ணிக்கை : 132
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Kannada