குடியரசுத் தலைவர் செயலகம்
மத்திய மின் பொறியியல் சேவை அதிகாரிகள் மற்றும் இந்திய வர்த்தக சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்
Posted On:
05 OCT 2023 2:26PM by PIB Chennai
மத்திய மின் பொறியியல் சேவை (2018,2020-2021 தொகுப்புகள்) அதிகாரிகள் மற்றும் இந்திய வர்த்தக சேவையின் (2022-தொகுப்பு) பயிற்சி அதிகாரிகள் இன்று (அக்டோபர் 5, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
மத்திய மின்சக்தி பொறியியல் சேவை அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், ஒரு நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாக எரிசக்தி தேவை, பயன்பாடு உள்ளதாகக் கூறினார். எனவே, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும்போது, மின் தேவையும், நுகர்வும் அதிகரிக்கும், இது நாட்டின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும்.
எரிசக்தி செயல்திறன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவை நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இந்தியாவின் இலக்கை அடைவதற்கான முக்கிய தூண்கள் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சர்வதேச எரிசக்தி முகமையின் கூற்றுப்படி, எரிசக்தி என்பது செயல்திறன், தூய்மையான எரிசக்தி மாற்றங்களில் "முதல் எரிபொருள்" என்று அழைக்கப்படுகிறது. இது எரிசக்தி செலவைக் குறைக்கிறது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடைவதை எளிதாக்கும் எரிசக்தி செயல்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு மத்திய மின் பொறியியல் சேவை அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார் .
உலக அரங்கில் இந்தியா போட்டித்தன்மையுடன் இருக்க, மின் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய வர்த்தக சேவை அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், பொருளாதாரத்தின் முதுகெலும்பை வர்த்தகம் உருவாக்குகிறது என்றார். இது முதலீட்டை ஊக்குவிக்கிறது, வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதிக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும், வர்த்தக மேம்பாட்டில் இந்திய வர்த்தக சேவை அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உத்திகளை வகுப்பதிலும் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2023, ஏற்றுமதியாளர்களுடனான 'நம்பிக்கை' மற்றும் 'கூட்டாண்மை' கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார். ஏற்றுமதியாளர்களுக்கு எளிதாக வணிகம் செய்வதற்கு வசதியாக செயல்முறை மறுசீரமைப்பு, ஆட்டோமேஷன் ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது. வளர்ந்து வரும் சர்வதேச வர்த்தக சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வர்த்தகப் பகுப்பாய்வின் சமீபத்திய முறைகளைக் கற்று பயன்படுத்துமாறு அவர் இந்திய வர்த்தக சேவை அதிகாரிகளை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களை இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID= 1964605
------------
SMB/ANU/IR/RS/KV
(Release ID: 1964754)
Visitor Counter : 171