மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மொழிசார்ந்த நிதி அதிகாரம் அளித்தலை முறைப்படுத்த அனைவரையும் உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வைக்கு டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவும், ரிசர்வ் வங்கி புத்தாக்க மையமும் ஒருங்கிணைந்துள்ளன

Posted On: 04 OCT 2023 3:24PM by PIB Chennai

இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், ரிசர்வ் வங்கி புத்தாக்க  மையம் (ஆர்பிஐஎச்) மற்றும் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு (டிஐபிடி) ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு நிதிச் சேவைகள் நிலப்பரப்பில் நிலவும் மொழித் தடைகளை உடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தங்கள் கூட்டு முயற்சியின் மூலம், இரு அமைப்புகளும் மொழியியல் உள்ளடக்கத்தை வளர்க்கும் புதுமையான தீர்வுகளை ஆராய்ந்து உருவாக்க உள்ளன.

நிதிச் சேவைகள் துறைக்குள் மொழியியல் உள்ளடக்கத்தின் அவசியத்தை உணர்ந்து, டிஐபிடி மற்றும் ரிசர்வ் வங்கி ஏற்கனவே உலகளாவிய ஃபின்டெக் விழாவின் போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தக் கூட்டாண்மை உள்ளூர் மொழிகளில் தகவல்தொடர்புகளை செயல்படுத்துவதன் மூலம் நிதி சேவைகளில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது. டிஜிட்டல் நிதிச் சேவைகளை பயனர்கள் தங்கள் தாய்மொழிகளில் விரிவுபடுத்துவதும், இறுதியில் அனைவருக்கும் தடையற்ற வங்கி அனுபவங்களுக்காக பாடுபடுவதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய நிதிநுட்ப விழாவில் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் நாக், இந்த முயற்சியில் குரலின் திறனை எடுத்துரைத்தார். "குரலை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துவதன் மூலம், பாஷினி நிதி உள்ளடக்கம், பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் நிதி கல்வியறிவை மேம்படுத்த முடியும். மொழி பெயர்ப்பு மற்றும் குரல் செயலாக்கத்தில் அதன் திறன்களைக் கொண்ட பாஷினி, இந்த இலக்குகளை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தக் கூட்டாண்மையின் மூலம், இந்தியாவின் நிதிச் சேவைகள் துறையில் மொழித் தடைகளை உடைப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். அவர்கள் பேசும் மொழியைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் நிதி சேவைகளை மிகவும் அணுகக்கூடியதாகவும் பயனர் நட்புறவாகவும் மாற்றுவதே எங்கள் குறிக்கோள்’’ என்று கூறினார்.

ரிசர்வ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் பன்சால், டிஜிட்டல் யுகத்தில் நம்பிக்கை, வேகம் மற்றும் வசதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "வேகமாக வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகில், நம்பிக்கை, வேகம் மற்றும் வசதி  என்னும் மூன்று தூண்கள் புதுமைக்கு வழிகாட்டுகின்றன. டிஜிட்டல் தீர்வுகள் வேகத்தையும் வசதியையும் வழங்குகின்றன, ஆனால் பயனரின் நம்பிக்கையைப் பெற வேண்டும். பயனர்களின் தாய்மொழியில் நிதிச் சேவைகளை வழங்குவது டிஜிட்டல் நிதி தீர்வுகளில் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவும். எங்கள் ஒருங்கிணைந்த திறன்கள் மூலம், நிதிச் சேவைகள் துறையில் இருக்கும் மொழித் தடைகளை எங்களால் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மொழி இனி ஒரு தடையாக இல்லாத அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார சூழலை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்’’ என்றார்.

அதிகரித்த ஸ்மார்ட்போன் பயன்பாடு  மற்றும் குறைந்த தரவு பயன்பாட்டு செலவுகளால் உந்தப்படும் ஒரு மாறிவரும் நிதிநுட்பத் துறையின் பின்னணியில் இந்த ஒத்துழைப்பு எழுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க ஆரம்ப கட்டமாக, பல மொழிகளில் உராய்வு இல்லாத கடனுக்கான பொது தொழில்நுட்ப தளத்தைத் தொடங்க பாஷினி திட்டமிட்டுள்ளது. இந்தத் தளம் நிதி நிறுவனங்களின் கடன் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அதிக நிதிச் சேர்க்கைக்கு கணிசமாக பங்களிக்கிறது.

இந்த முன்னேற்றங்கள் நாட்டின் நிதிச் சேர்க்கை முயற்சிகளுக்கு உந்துதலாக இருந்தாலும், குறிப்பிட்ட துறைகள் மற்றும் மக்கள் பிரிவுகள் முறையான நிதித் துறையின் விளிம்பில் உள்ளன. இந்த ஒத்துழைப்பு நிறுவப்பட்ட நிதி சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

டிபிஐடி பற்றி

டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு என்பது டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் கீழ் உள்ள ஒரு பிரிவு. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பிரிவு 8 நிறுவனம் ஆகும். மொழித் தடைகளைக் கடக்கும் நோக்கத்திற்காக பங்களிப்பாளர்கள், கூட்டு  நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்த இயற்கை மொழி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும், இதன் மூலம் தற்சார்பு இந்தியாவில் டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் அதிகாரமளித்தலை உறுதி செய்வதும் பாஷினியின் நோக்கமாகும். மேலும் படிக்க, www.bhashini.gov.in  அல்லது அஞ்சல் ceo-dibd@digitalindia.gov.in  ஐப் பார்வையிடவும்

ஆர்பிஐஎச் பற்றி

இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமான ரிசர்வ் வங்கி புத்தாக்க  மையம் (ஆர்பிஐஎச்) ஒரு பில்லியன் இந்தியர்களுக்கு உராய்வு இல்லாத நிதியை செயல்படுத்தும் ஒரு அமைப்பாகும். நிதித் துறை முழுவதும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் விரைவுபடுத்துவதற்கும் நிதி, தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து, சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு செயல்படுத்துபவராகவும் அனுசரணையாளராகவும் ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. கருத்துப் பரிமாற்றத்தை எளிதாக்கும் மற்றும் முன்மாதிரிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரிக்கும் ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்புடன், ரிசர்வ் வங்கி இந்திய நிதி அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய நிதி கண்டுபிடிப்புகளில் இந்தியாவை முன்னணியில் நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அறிய, www.rbihub.in  பார்வையிடவும் அல்லதுஎங்களுக்கு எழுதவும் Communications@rbihub.in

-----

ANU/AD/PKV/KPG


(Release ID: 1964287) Visitor Counter : 158