வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒன்றாக இணைந்து ; தூய்மை இயக்கம் புதிய சாதனை


தூய்மை இந்தியா திட்டம் 8.75 கோடி மக்களை ஒருங்கிணைத்து 9 லட்சம் இடங்களில் சேவை வழங்கியது

Posted On: 03 OCT 2023 3:36PM by PIB Chennai

2023, அக்டோபர் 1-ம் தேதி காலை, 10:00 மணிக்கு, துாய்மை இந்தியா திட்டம், புதிய வரலாறு படைத்தது. நாடு முழுவதும் மெகா தூய்மை இயக்கத்தில் கோடிக்கணக்கான மக்கள் தாமாக முன்வந்து சேவை  செய்தனர். பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரபல ஃபிட்னஸ் ஆலோசகர்  அங்கித் பையான்பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார். "இன்று, தேசம் தூய்மையில் கவனம் செலுத்துவதால், அங்கித் பையான்பூரியாவும் நானும் அதையே செய்தோம்! தூய்மையைத் தாண்டி, உடற்தகுதி மற்றும் நல்வாழ்வையும் கலவையில் இணைத்தோம். அது அந்த தூய்மை மற்றும் தூய்மை இந்தியா  அதிர்வைப் பற்றியது!"  என்று அதனைக் குறிப்பிட்டார்.

குடிமக்களுக்கு சொந்தமான மற்றும் வழிநடத்தப்படும் இந்த மெகா தூய்மை இயக்கம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து பங்கேற்றுள்ளது. 9 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கிட்டத்தட்ட 8.75 கோடி பேர் பங்கேற்றுள்ளனர். தெருக்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச் சாவடிகள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், சுகாதார நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், பாரம்பரிய மற்றும் சுற்றுலா இடங்கள், குடியிருப்பு காலனிகள், நீர்நிலைகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப்பகுதிகள், சந்தைப் பகுதிகள், விமான நிலையங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு பகுதிகள், கோசாலைகள் போன்றவற்றில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2023, அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு மக்களின் கூட்டு முயற்சியின் விளைவாக, சுமார் 1.5 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு (கிரீஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளின் அளவை விட அதிகம்) சுத்தம் செய்யப்பட்டது! இந்த 1 மணி நேரத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 1.2 லட்சம் கி.மீ தூரத்தை மக்கள் சுத்தம் செய்தனர்.

பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைகளைக் கடந்து, சுகாதாரம் நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாக இருப்பதால், நாடு முழுவதும் மெகா தூய்மை இயக்கம் உத்வேகம் பெற்றது. பல ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்கள், ஆயிரக்கணக்கான சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கொண்டனர். ஜவான்கள், பொதுமக்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மற்றும் என்.ஒய்.கே தன்னார்வலர்கள், சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓக்கள், ஆர்.டபிள்யூ.ஏக்கள், சந்தை சங்கங்கள், தொழில் அமைப்புகள், நம்பிக்கைத் தலைவர்கள், பிரபலங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், யூடியூபர்கள், கலைஞர்கள் போன்றோர் இந்த மெகா முன்முயற்சியில் ஒன்றிணைந்தனர். சுலப் சர்வதேச சமூக சேவை அமைப்பு சுமார் 50,000 குடிமக்களை வழிநடத்தி 1000 பொது கழிப்பறைகளை சுத்தம் செய்தது.  அமிர்தானந்தமயி நிறுவனத்தினர், ஊர்மக்கள், பக்தர்களுடன் இணைந்து, பல்வேறு பகுதிகளில் துாய்மைப்பணி மேற்கொண்டனர். ஈஷா அறக்கட்டளை தன்னார்வலர்கள் மையத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள தெருக்கள், காலனிகள், கழிவறைகளை சுத்தம் செய்தனர். பாபா ராம்தேவ் யோகாபீடம் 30,000 குடிமக்களுடன் இணைந்து பூங்காக்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்பட 1000 க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டது. இஸ்கான் அமைப்பின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஒன்றிணைந்து சாலைகளை சுத்தம் செய்தனர். கிரெடாய், சிஐஐ, ஃபிக்கி, அசோசெம், பிரிட்டானியா, பஜாஜ், ஆதித்யா பிர்லா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்றன. அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், இளையராஜா போன்ற பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் என பலரும் திரண்டு பொதுமக்களை உற்சாகப்படுத்தினர். ரிக்கி கேஜ், அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, ராஜ்குமார் ராவ் போன்ற பலரும் களத்தில் இறங்கினர். வக்பு வாரியம், குருத்வாரா தன்னார்வலர்கள், ரோட்டரி கிளப், ஆகா கான் பவுண்டேஷன், ராமகிருஷ்ணா மிஷன் போன்ற அமைப்புகளும் இணைந்து செயல்பட்டன. பி.எம்.ஜி.எஃப், யு.எஸ்.ஏ.ஐ.டி, யுனிசெஃப், ஜி.ஐ.இசட் போன்ற துறை கூட்டாளர்களும் தூய்மை இயக்கங்களில் இணைந்தனர்.

மத்திய அரசின் அமைச்சகங்களின் கீழ் உள்ள பல்வேறு அமைப்புகள் தனித்துவமான நடவடிக்கைகளுடன் முன்வந்தன. மத்திய அமைச்சர்களும் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியில் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 24, 2023 அன்று நடைபெற்ற 105 வது மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் அழைப்பு விடுத்த பின்னர், மக்கள் பதிவு செய்யவும், அடையாளம் காணவும், தேர்ந்தெடுக்கவும் ஒரு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை இயக்கம் விரைவாக உருவாக்கியது. நகர அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவற்றை பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் வலுவான பின்புல உள்கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. குப்பைகள் அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களை தேர்வு செய்து இணைய முடிந்தது. ஷிம்தான தினத்தன்று அவர்கள் தங்கள் படங்களை பதிவேற்றம் செய்து பங்கேற்பு சான்றிதழைப் பெறலாம். எந்தவொரு சமூக நடத்தை மாற்ற பிரச்சாரத்திலும் இன்றியமையாததைப் போலவே, இந்த முன்முயற்சியைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் மற்றும் அவர்களின் பங்கேற்புக்கு வேண்டுகோள் விடுக்கும் எளிய மற்றும் சீரான செய்திகள் கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உள்ளூர் தனிநபர் தகவல்தொடர்பு, டிஜிட்டல் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற புதுமையான தகவல்தொடர்பு சாதனங்களின் கலவையைப் பயன்படுத்தி நாடு முழுவதும் இந்த வேகம் கட்டமைக்கப்பட்டது.

மக்களின் இந்த கூட்டு நடவடிக்கையால் அனைத்து இடங்களிலும் தூய்மை காணப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் 9 ஆண்டுகளில், மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்துள்ளனர், இது கூட்டு முயற்சிகளின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. ஒரே நோக்கத்திற்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் ஒன்றுகூடி தூய்மையான தேசத்திற்கான தன்னார்வ முயற்சியை முன்வைப்பது நிச்சயமாக ஒரு வகையான முயற்சியாகும். தூய்மை இந்தியா திட்டம் -2.0 இன் கீழ் பயணம் தொடரும் நிலையில், இதுபோன்ற கூட்டு நடவடிக்கை நிச்சயமாக 2026 க்குள் அறிவியல் கழிவு மேலாண்மை மற்றும் பாரம்பரிய குப்பை கிடங்குகளை சரிசெய்வதன் மூலம் 'குப்பை இல்லாத நகரங்களுக்கான' செயல்பாட்டின் வலிமையை அதிகரிக்கும்.  

----

ANU/AD/PKV/KPG



(Release ID: 1963782) Visitor Counter : 133