பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2022-ல் ஆர்எஸ்:எக்ஸ் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஈபாத் அலிக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
Posted On:
26 SEP 2023 4:20PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆர்எஸ்:எக்ஸ் (பாய்மரப் படகுப் போட்டி) ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக ஈபாத் அலியின் அற்புதமான செயல்திறனைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பாய்மரப் படகுப் போட்டியில் ஈபாத் அலியின் அற்புதமான செயல்பாடு. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆர்எஸ்:எக்ஸ் ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று நமக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
நமது இளம் திறமையாளர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை அவரது சாதனைகள் காட்டுகின்றன. அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்".
***
(Release ID: 1960878)
ANU/AP/SMB/KV/KRS
(Release ID: 1961043)
Visitor Counter : 120
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada