சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கட்டுக்கதைகளும் உண்மைகளும்
Posted On:
26 SEP 2023 12:37PM by PIB Chennai
காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகள் தவறானவை
மத்திய சேமிப்புக் கிடங்குகள் முதல் புறநகர் சுகாதார நிறுவனங்கள் வரை பல்வேறு மட்டத்தில் இருப்பு நிலைகளை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை
இந்தியாவில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் (என்.டி.இ.பி) கீழ் அத்தகைய மருந்துகளின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்புவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தகைய அறிக்கைகள் தெளிவற்றவை மற்றும் தவறான தகவல்கள் ஆகும்.
மருந்து உணர்திறன் காசநோய் சிகிச்சையில் 4 எஃப்.டி.சி (ஐசோனியாசிட், ரிஃபாம்பிசின், எதம்புடோல் மற்றும் பைராசினமைடு) என கிடைக்கக்கூடிய நான்கு மருந்துகள், 3 எஃப்.டி.சி (ஐசோனியாசிட், ரிஃபாம்பிசின் மற்றும் எதம்புடோல்) என மூன்று மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் அனைத்தும் ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்துக்கு போதுமான கையிருப்பில் உள்ளன.
பல மருந்து காசநோய்க்கான எதிர்ப்பு சிகிச்சை முறை பொதுவாக நான்கு மாதங்கள் 7 மருந்துகளைக் கொண்டுள்ளது (பெடாக்விலின், லெவோஃப்ளோக்சசின், குளோஃபாசிமைன், ஐசோனியாசிட், எதம்புடோல், பைராசினமைடு மற்றும் எத்தியோனமைடு) மற்றும் ஐந்து மாதங்கள் 4 மருந்துகள் (லெவோஃப்ளோக்சசின், குளோஃபாசிமைன், பைராசினமைடு மற்றும் எத்தாம்புடோல் )ஆகியவற்றைக் கொண்டுள்ளது . மருந்து எதிர்ப்பு காசநோய் உள்ளவர்களில் சுமார் 30% பேருக்கு, சைக்ளோசரின் மற்றும் லைன்சோலிட் தேவைப்படுகிறது.
காசநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற பொருட்களை கொள்முதல் செய்தல், சேமித்தல், இருப்பு வைத்தல் மற்றும் சரியான நேரத்தில் விநியோகித்தல் ஆகியவை என்.டி.இ.பி.யின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரிதான சூழ்நிலைகளில், தனிப்பட்ட நோயாளி பராமரிப்பு பாதிக்கப்படாத வகையில் தேசிய சுகாதார இயக்கத்தின் (என்.எச்.எம்) கீழ் வரவு செலவுத் திட்டத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்நாட்டில் சில மருந்துகளை கொள்முதல் செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. மகாராஷ்டிரா ஏற்கனவே சைக்ளோசெரின் மாத்திரைகளை வாங்கியுள்ளது. ஒரு சில மாநிலங்கள் மாவட்டங்களுக்கு கொள்முதல் செய்துள்ளன; அதன்படி, தேவைப்படும் இடங்களில் மாவட்டங்கள் கொள்முதல் செய்துள்ளன.
இத்துறையில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை. நி-க்ஷய் அவுஷதியின் படி இன்று (26 செப்டம்பர் 2023) நிலவரப்படி தேசிய அளவில் இந்த மருந்துகள் போதுமான அளவுக்கு கையிருப்பில் உள்ளன.
எனவே, ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தெளிவற்றவை மற்றும் தவறான தகவல்கள் ஆகும். நாட்டில் கிடைக்கக்கூடிய காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் கையிருப்பின் சரியான நிலையை இந்தச் செய்திகள் பிரதிபலிக்கவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1960787
-------------
AP/ANU/PKV/GK
(Release ID: 1960950)
Visitor Counter : 214